“ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் அதுதான்” - கார்கே தாக்கு!
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான சிக்கல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பாஜக - ஆர்.எஸ்.எஸ் காரணமாகவே நிகழ்கின்றன என கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாட்டின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலைக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே மதிக்கிறார் என்றால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

மகாத்மா காந்தி இறந்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜனசங்கத்தின் தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் ஒரு கடிதம் எழுதி இருந்தார். பிப்ரவரி 4, 1948 தேதியிட்ட அந்த கடிதத்தில், 'காந்திஜியின் மரணத்தை அடுத்து, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்து இனிப்பு விநியோகித்தனர். இதனால், அவர்கள் மீது எதிர்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபையின் செயல்பாடுகளால் நாட்டில் உருவாக்கப்பட்ட சூழல் காந்திஜியின் படுகொலைக்கு வழிவகுத்தது என்பதை அறிக்கை நிரூபிக்கிறது' என்று தெரிவித்தார். இந்த கடிதத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கருக்கும் படேல் எழுதினார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் உரைகள் வகுப்புவாதத்தின் விஷத்தால் நிரம்பியிருந்தன என்று சர்தார் படேல் கூறுவார். ஆர்.எஸ்.எஸ் காரணமாகத்தான் காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். காந்திஜியை கொன்ற அதே மக்கள் இப்போது காங்கிரஸை கேள்வி கேட்கிறார்கள். சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒன்றிணைத்த ஒரு தலைவர். அடிப்படை உரிமைகள் குறித்த தனது கருத்துகளை அரசியலமைப்புச் சபையில் முன்வைத்து அரசியலமைப்பில் அவற்றுக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தவர் படேல்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள அவரது பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து படேல் சிலை முன்பாக முதன்முறையாக நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை சர்தார் படேல் சாத்தியமாக்கினார். ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற யோசனை படேலுக்கு மிக முக்கியமானது. படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் நேரு அவரது விருப்பத்தை தடுத்தார். இதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, தனி அரசியலமைப்பு மற்றும் தனி கொடி வழங்கப்பட்டது. காங்கிரஸின் இந்த தவறு காரணமாக நாடு பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டது" என விமர்சித்திருந்தார்.
-
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!











Click it and Unblock the Notifications