வாரத்திற்கு 70 மணி நேர வேலை.. இதில் என்ன தப்பு இருக்கு.. காங்கிரசின் மனிஷ் திவாரி சொல்றதை பாருங்க!
டெல்லி: வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தியில் கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் இந்தியா வல்லமை மிக்க நாடாக மாற வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்பதை தொழிலாளர் சட்டங்கள் வரையறுத்துள்ளன. இந்த நிலையில் வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை உயர்த்த முடியும் என்று தனியார் நிறுவனங்கள் பல கோரிக்கைகள் வைப்பதை காண முடிகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் பிரபல தொழில் அதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தி , ஊழியர்களின் பணி நேரம் குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி கூறுகையில், "பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போட நாம் தயாராக இருக்க வேண்டும். நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். நாராயண மூர்த்தியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஒலா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட சிலர் நாராயண மூர்த்தியின் கருத்தை வரவேற்றுள்ளனர். அதேநேரம் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்பது இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும் என்பதே அவர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை தாண்டி தனியார் நிறுவனங்கள் வேலை வாங்குவதாகும் 70 மணி வேலை என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சரிபட்டு வராது எனவும் நெட்டிசன்கள் பலரும் நாராயண மூர்த்தியை வசைபாடினர். இது தொடர்பான விவாதங்கள் நீடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மனிஷ் திவாரி கூறுகையில், " வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நாராயண மூர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. இந்தியா உண்மையிலெயே வல்லமை மிக்க நாடாக மாற வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையுடன் 70 மணி நேர வேலை & வருடத்திற்கு 15 நாட்கள் விடுமுறை என்பது கண்டிப்பாக விதிமுறைகளாக கொண்டு வரவேண்டும்" என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications