முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி மன்மோகன் சிங் ஆகியோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

Congress leaders pays tribute to Pandit Jawaharlal Nehru on his death anniversary

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீதுஅன்சாரி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்திருப்பதாவது, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அவரது நினைவு நாளில் அஞ்சலி. நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை நாம் நினைவு கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+