• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

காங்கிரஸின் பிரமிக்க வைக்கும் வாக்குறுதிகள்.. மக்களைக் கவரவா.. இல்லை பாஜகவைக் கவிழ்க்கவா?

|
  Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

  டெல்லி: பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், அந்த கட்சிக்கு சாதகமாக கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கில்,, யாரும் நம்ப முடியாத வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிவிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டார்.

  நீட் தேர்வு ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், ஏழைகளின் கணக்கில் ஆண்டுக்கு 72 ஆயிரம் பணம் என பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி அதிரவைத்தார்.

   காஷ்மீரில் பாதுகாப்பு படை

  காஷ்மீரில் பாதுகாப்பு படை

  தேசிய விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவததை தடுக்கும் வகையில் அந்த சட்டம் திருத்தப்படும் என்றும் காஷ்மீரில் ராணுவம் குறைக்கப்படும் என்றும் கூறி பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தார்.

  ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்த 4 அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து விடுவித்த தேர்தல் ஆணையம்

   உடனே தகுதி நீக்கம்

  உடனே தகுதி நீக்கம்

  இந்நிலையில் கட்சி தாவல் தடை சட்டம் திருத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியில் இருந்து எம்பியோ, சட்டசபை எம்எல்ஏவோ வேறு கட்சிக்கு தாவினால் உடனே அவர்கள் தகுதி இழந்துவிடுவார்கள். இதேபோல் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்துவந்துவிட்டு திடீரென வாபஸ் பெற்றாலும் அந்த நிமிடமே எம்பி எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி இழப்பார்கள்.

   தேர்தலில் கருப்பு பணம்

  தேர்தலில் கருப்பு பணம்

  இயலாமை காரணமாக தேர்தலில் பணம் தராளமாக புழங்குவதை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தவிக்கிறது. இதனால் வாக்காளர்களுக்கு கருப்பு பணத்தை கொடுத்து ஓட்டுகள் பெறுவது நிகழ்கிறது. இதனை தடுக்க உறுதியான நடவடிக்கையினை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

   யார் வேண்டுமானாலும்

  யார் வேண்டுமானாலும்

  தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு பதில் தேசிய தேர்தல் நிதி என்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் யார் வேண்டுமானலும் பணத்தை செலுத்தி பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். இப்போது உள்ள திட்டத்தின் படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே பணத்தை செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. இனி அது மாறும்.

   வாக்கு உறுதிச்சீட்டு

  வாக்கு உறுதிச்சீட்டு

  யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள விவிபிஏடி என்ற தேர்தல் உறுதி சீட்டில் பிரிண்ட் செய்து வழங்கும். இந்த சீட்டுகளில் 50 சதவீதத்தை, கைகளால் வரும் தேர்தலில என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

   காங்கிரஸ் வைத்த ஆப்பு

  காங்கிரஸ் வைத்த ஆப்பு

  இந்த புதிய கட்சி தாவல் தடை சட்டப்படி, உடனடியாக தகுதி இழக்கும் அமைச்சர் உள்பட யாராக இருந்தாலும் அரசு இல்லங்களில் வசிக்க தடை விதிக்கப்படும். மேலும் கட்சி தாவல் மூலம் தகுதி நீக்கப்பட்டவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

   மக்களிடம் கருத்து கேட்டு சட்டம்

  மக்களிடம் கருத்து கேட்டு சட்டம்

  நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு சட்டம் நிறைவேற்றப்படும் முன்பு மக்களின் கருத்துக்கள் கேட்க வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக காங்கிஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் அனைத்து அரசு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை சமூக தணிக்கைக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களுக்காக சமூக பொறுப்புணர்வு சட்டம் (Social Accountability Act) கொண்டுவரப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

   
   
   
  English summary
  The Congress has promised to to scrap electoral bonds, amend anti-defection laws
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X