நீட் தேர்வு விவாதத்தில் முன்னால் நிற்க வேண்டிய பிரதமர் எஸ்கேப் ஆவது துரதிருஷ்டவசமானது- ராகுல் காந்தி
டெல்லி: நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு தலைமை தாங்க வேண்டிய பிரதமர் விவாதத்தை விரும்பாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், நாங்கள் விவாதத்திற்கு தயாராக உள்ளோம், நாங்கள் அரசாங்கத்துடன் சண்டையிட விரும்பவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர்.

மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக என்டிஏ அறிவித்தது
இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் வினாத் தாள் விற்பன, தேர்வை பார்த்து எழுத லஞ்சம் உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. நீட் தொடர்பாக விவாதிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு தலைமை தாங்க வேண்டிய பிரதமர் வெறுமனே விவாதத்தை விரும்பாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், நாங்கள் விவாதத்திற்கு தயாராக உள்ளோம், நாங்கள் அரசாங்கத்துடன் சண்டையிட விரும்பவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். துதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,”நீட் தேர்வைப் பொறுத்த வரையில் ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது, வினாத் தாள் கசிந்து ஊழல்வாதிகள் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே.
There has been a disaster as far as NEET is concerned and everybody knows that the paper was leaked and people made thousands and crores of money.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) June 28, 2024
The dreams and aspirations of all those students have been destroyed and ridiculed.
Hence, yesterday, at the Opposition meeting I… pic.twitter.com/Mpyw2MtNQU
இதன் காரணமாக அதை அறியாமல் தேர்வு எழுதிய அந்த அனைத்து மாணவர்களின் கனவுகளும் அபிலாஷைகளும் அழிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டுள்ளன. எனவே, நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மாணவர்களின் பிரச்னையை எழுப்பி, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, நம் நாட்டின் எதிர்கால மாணவர்களை நம்பி, இதைப் பற்றி ஒரு நாள் செலவிட வேண்டும் என்று கூறினேன். இணக்கமான முறையில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்தன.
7 ஆண்டுகளில் 70 முறை 2 கோடி மாணவர்களை பாதித்த போதிலும் நான் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது பேச அனுமதிக்கவில்லை. ஒரு முறையான பிரச்சனை, மிகப்பெரிய ஊழல், அதைத் தொடர முடியாது என்பது தெளிவாகிறது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காண வேண்டும். விவாதத்திற்கு தலைமை தாங்க வேண்டிய பிரதமர் வெறுமனே விவாதத்தை விரும்பாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் விவாதத்திற்கு தயாராக உள்ளோம், நாங்கள் அரசாங்கத்துடன் சண்டையிட விரும்பவில்லை, எங்கள் கருத்துக்களை மேசையில் வைக்க விரும்புகிறோம்.” என கூறியுள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications