2014 காங்கிரஸ் தோல்விக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத்துறையே காரணம்.. மாஜி எம்பி குற்றச்சாட்டு!
டெல்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை அமைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றார். அதேபோல் கடந்த முறையை போல் இம்முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியவில்லை.

அதேபோல் கடந்த இரு தேர்தல்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாடு இந்திய அரசமைப்பு சட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசிய கருத்து விவாதமாகி இருக்கிறது.
அதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசுகையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 206 இடங்களையும் வென்றது. இந்த போக்கின்படி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 250 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வெறும் 44 இடங்களாக குறைந்தது.
அப்போதுதான் சில அமைப்புகளின் ஆட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாமல், இந்தியாவிற்குள் எந்த விளையாட்டையும் நம்மால் ஆட முடியாது என்று சில அமைப்புகள் செயல்பட்டன. அவற்றில் ஒன்று சிஐஏ.. மற்றொன்று இஸ்ரேலின் மொசாட் அமைப்பு.. இந்த இரு அமைப்புகளும் இந்தியாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தன.
மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களால் இந்தியாவில் தலையிட்டு தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது என்று கருதினார்கள். இந்த இரு உளவு முகமைகளும், டெல்லியில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கருதினர். ஆனால் அது காங்கிரஸ் அரசாக இருக்கக் கூடாது என்றும் நினைத்தனர்.
இதையடுத்து சிஐஏ மற்றும் மொசாட் ஆகிய இரு அமைப்புகளிடமும் இந்திய மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் பற்றிய துல்லியமான தரவுகள் இருந்தன. அதேபோல் 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை 206ல் இருந்து 44 ஆகக் குறைக்கும் அளவுக்குப் பெரியதல்ல.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட கோரும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கை இல்லாமல் போனது. அந்த தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பாக இல்லை என்று தெரிவித்தார். குமார் கேத்கரின் கருத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications