100-க்கு 99 இல்லை.. 543 க்கு தான் 99-ல் ஜெயிச்சிருக்கீங்க.. காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக சாடிய நிலையில், பிரதமர் மோடி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி வருகிறார். வாக்கு வங்கிக்காக நாட்டை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துவதாகவும் கூறினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பிரதமர் மோடி சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்திய நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து மோடி பேசினார்.

அப்போது பிரதமர் மோடி, தொடர்ச்சியாக 3-வது முறையாகவும் காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது என்றும் மோடி கிண்டல் செய்தார். லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இனிவரும் சட்ட சபை தேர்தலில் பாஜகவே வெல்லும். இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு. தொடர்ச்சியாக 3-வது முறையாக காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளாவிலும் பாஜக கணக்கை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சியாக அமரவே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. தேர்தல்களில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துவிட்டது. கடந்த 10 தேர்தலில் ஒரு முறை கூட காங்கிரஸ் கட்சி 250 தொகுதிகளை வெல்ல முடியவிலை. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது. 543 தொகுதிகளில் தான் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றது. இவ்வாறு அவர் பேசினார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி











Click it and Unblock the Notifications