திரும்ப வர்றேன்னு சொல்லு-காங்கிரஸ் புதைகுழிக்குப் போகலை- அடித்து சொல்லும் மேகாலயா, திரிபுரா ரிசல்ட்!
பெரும் பலவீனங்களை எதிர்கொண்ட போதும் மேகாலயா, திரிபுராவில் காங்கிரஸ் மீண்டு எழுந்துள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சி எத்தனை புயல்கள் வீசினாலும் அத்தனையையும் எதிர்கொண்டு மீண்டு(ம்) எழும் என்பதையே மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டசபை தேர்தல்கள் அடித்துச் சொல்கின்றன.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அனைத்திலும் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்தது ஒரு காலம். இப்போது அத்தனை மாநிலங்களிலும் தலைகீழ் நிலவரம்தான் காங்கிரஸுக்கு.

திரிபுராவில் இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்த போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையுமே பாஜக கபளீகரம் செய்தது. இதனால் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம், திரிபுராவில் இல்லை என்றே கூறப்பட்டது. 2018 சட்டசபை தேர்தல் முடிவுகளும்கூட அப்படித்தான் இருந்தன. 59 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அம்மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் மொத்தம் 1.79% மட்டும்தான்.
2021 சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொண்டன. இத்தேர்தலில் பாஜகதான் வென்றிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் 3 இடங்களில் வென்றுள்ளது. வெறும் 1.79% ஆக இருந்த அதன் வாக்கு சதவீதம் 8.61% ஆக அதிகரித்து மலைக்க வைத்திருக்கிறது.
மேகாலயாவில் 2018 சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகவே உருவெடுத்தது காங்கிரஸ். ஆனால் அப்போது என்பிபி, 2 இடங்களில் வென்ற பாஜக உள்ளிட்டவை இணைந்து ஆட்சியை அமைத்தன. அத்துடன் ஓயவில்லை. காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இதனால் மேகாலயா மாநிலத்திலும் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகவே கூறப்பட்டது.
2021 சட்டசபை தேர்தல் முடிவுகளோ, காங்கிரஸுக்கு முடிவுரை எழுத நினைத்தவர்களின் கனவு நிறைவேறவில்லை. இத்தேர்தலில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் வாகை சூடி உள்ளது. காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை தந்த திரிணாமுல் காங்கிரஸும் 5 இடங்களில்தான் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 13.34% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸை கபளீகரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 13.67% வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது ஆளும் காங்கிரஸை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 80622 வாக்குகளையும் திரிணாமுல் வேட்பாளர் 58296 வாக்குகளையும் பெற்றுள்ளார். இத்தொகுதியில் பாஜகவுக்கு 23156 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 47.89% வாக்குகளையும் திரிணாமுல் காங்கிரஸ் 34.62% வாக்குகளையும் பாஜக 13.75% வாக்குகளையும் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது அடித்தள கட்டமைப்பின் வாக்குகளை இன்னமும் வைத்திருக்கிறது. அதனை உயிர்ப்பித்து வெற்றியை அறுவடை செய்வதற்கான சரியான எழுச்சியான ஒரு தலைமை தேவை என்பதைத்தான் இப்போதைய தேர்தல் முடிவுகள் வெளிப்படையாகவே சொல்கின்றன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications