குடியரசு தலைவர் தேர்தல்.. பாஜகவை வீழ்த்த.. கியரை மாற்றிய காங்கிரஸ்.. எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
டெல்லி: குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜுன் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 29ஆம் தேதி என்பதால், வேட்பாளர் தேர்வு மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற ஆளும் பாஜக தலைவர்களும், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டு வருகின்றன.

எவ்வளவு வாக்குகள் கைவசம்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியாவில் உள்ள அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,79,206 உள்ளது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 5,26,420 வாக்குகளை வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம் 2,59,292 வாக்குகள் கைவசம் உள்ளன. மீதமுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 2,92,894ஆக இருக்கிறது. இந்தநிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற, 13 ஆயிரம் வாக்குகள் தேவை இருக்கிறது.

வேட்பாளர்கள் யார்?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில், இஸ்லாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரில் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு-வுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரதமருடன் சந்திப்பு
இந்தநிலையில் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இருவரும் இரு நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டெல்லியில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் பேச்சு
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனையில் உள்ளது. அதேபோல் மறுபக்கம் மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் ஆதரவை பெற காங்கிரஸ் வேலை செய்து வருகிறது. காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications