ரூ.1 லட்சத்தில் வேலை.. ரோஹித் வெமுலா சட்டம்.. கவனம் ஈர்க்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமானதாக ரூ.1 லட்சத்தில் இளைஞர்களுக்கு வேலை, கல்வி நிலையங்களில் பட்டியல் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க ரொஹத் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த அறிக்கையை தயார் செய்ய ப.சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு, நாடு முழுவதும் மக்களிடமிருந்து மின்னஞ்சல் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கருத்துக்களை கேட்டு பெற்றிருந்தது.

இப்படி பெறப்பட்ட கருத்துக்குள் ஒன்றாக தொகுக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் பெறும் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஏழ்மையான குடும்பத்தை கண்டறிந்து, அந்த குடும்பத்தின் தலைவிக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்பது நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்,
- ரூ.1 லட்சம் ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
- விவசாயிகளின் கடன் தள்ளுபடி
- நீட், கியூட் தேர்வு மாநிலத்திற்கு விருப்பத்திற்கு உட்பட்டது
- கல்வி நிலையங்களில் பட்டியல் மக்கள் மீதான வன்கொடுமையை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம்
- அரசு பணிகளுக்கு ஒப்பந்த முறையில் ஆட்கள் சேர்க்கும் முறை ரத்து
- ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை
- 2025 முதல் அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் ஒதுக்கப்படும்
- 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்
- 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை
- ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்
- ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்
- ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது
- தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும்
- அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்
- பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்
உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களிடையே பெரும் கவனம் பெற்றிருக்கின்றன.












Click it and Unblock the Notifications