Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசா முறைகேடு வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி! டெல்லி நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டு நடத்தி இருந்தனர்.

சென்னை, டெல்லி, மும்பை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

சீனர்கள்

சீனர்கள்

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் கார்த்தி சிதம்பரம் பண மோசடி ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு அவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, ​​263 சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத் துறை சமீபத்தில் பண மோசடி வழக்கைப் பதிவு செய்தது. இந்த கேஸில் தான் ரெய்டையும் நடத்தி இருந்தது.

 முன்ஜாமீன்

முன்ஜாமீன்

இதே வழக்கில் சிபிஐ சமீபத்தில் அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்து இருந்தது. இருப்பினும், இது அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்கு என்றும் இதில் துளியும் உண்மை இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறி வருகிறார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியும் அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

 வாதம்

வாதம்

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் என்றும் பரிவர்த்தனை 2011இல் நடந்ததாகக் கூறப்படுவதாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் வழக்கைப் பதிவு செய்துள்ளனர் என்றும் வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பான மின்னஞ்சல்கள் இருந்தும் பல ஆண்டுகளாக அதை விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 ரூ 50 லட்சம்

ரூ 50 லட்சம்

மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு ₹ 50 லட்சம் என்பதால், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, "ஜாமீன் மனுவில் எந்த ஆதாரமும் இல்லை. அது முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை நாங்கள் விசாரிப்போம். அவர்கள் கைது செய்யப்படுவோம் என்று ஏன் அஞ்சுகிறார்கள்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 தள்ளுபடி

தள்ளுபடி

ப. சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்த போது, தந்தையின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது சிபிஐ தரப்பிலும் கூறப்பட்டது. கடந்த அனைத்து தரப்பு விசாரணையைக் கேட்ட நீதிபதி தீர்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று முன்ஜாமீன் மனுவில் தீர்பு வழங்கிய நீதிபதி, சீனர்களுக்குச் சட்டவிரோத விசா பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+