திமுகவால் வருத்தம்.. சீக்கிரம் முடிவு எடுக்காவிடின்.. டெல்லியில் டோனை மாற்றிய செல்வப்பெருந்தகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் எழுந்துள்ளது. தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸில் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுநாள் வரை திமுகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வந்த செல்வப்பெருந்தகை, இன்று நடைபெற்ற டெல்லி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தனது டோனை மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஆனால் திமுக கூட்டணியில் பிரச்சனைகள் எட்டி பார்க்க தொடங்கிவிட்டன. முக்கியமாக காங்கிரஸ் கட்சியில் பலர் தவெகவுடன் இணைய ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

congress-selvaperunthagai-changed-his-tone-on-dmk-after-delhi-meeting

காங்கிரஸ் டெல்லி கூட்டம்

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் திமுகவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்கள். மறுபக்கம் செல்வப்பெருந்தகை, சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் குழு அமைத்தும், திமுக குழு அமைக்காமல் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் இன்று தமிழ்நாடு அரசியல் குறித்து ஆலோசனை செய்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிறிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்செட்டில் தொண்டர்கள்

இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, " தேர்தல் களம், சந்திப்பு எல்லாம் மாறிவிட்டது. எல்லோரும் ரொம்ப அட்வான்சாக தேர்தலை சந்திக்கிறார்கள். பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் கடைசி நேரத்தில் முடிவு எடுத்ததால் சங்கடங்கள் ஏற்பட்டன. கடைசி நிமிடத்தில் முடிவு செய்வதால் தேர்தல் பணியாற்ற முடியாது.

திமுக பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். எல்லோருமே தங்களின் வருத்தத்தை பதிவு செய்தனர். திமுக மீது அதிருப்தி இல்லை. ஆனால் விரைவில் குழு அமைப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் குழு அறிவித்தால் தேவையில்லாத பிரச்சனைகள், குழ ப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் உடனடியாக குழு அமைக்க வேண்டும்.

நாங்கள் ரெடி.. திமுக ரெடியா

திமுக இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்லையே. முதல்வர் உடனே பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது. ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் பேசிய தகவல், மேலிடம் வலியுறுத்தல் ஆகியவை குறித்து முதல்வரிடம் கொண்டு செல்வோம்.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு பேச்சுவார்த்தைக்கு ஒரு வாரம் கூட அவகாசம் வழங்க மாட்டார்கள். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு எங்களுக்கு நேரம் வேண்டும். ராகுல் காந்தி, கார்கே ஆகியோரின் பிரச்சார சுற்றுப் பயணம் தயார் செய்துவிட்டோம். நாங்கள் ரெடி. திமுக ரெடியா என்பதை கூற வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+