"அவர் மீது டவுட் இருக்கு!" பிகே குறித்து ஓப்பானாக பேசிய காங். மூத்த தலைவர்! ஓ இதான் காரணம்
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் திக்விஜய சிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைமை மீதா அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருவதால், தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
இந்தச் சூழலில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். இது தொடர்பாக ஆலோசிக்க 3 நாட்களில் இரு முறை பிகே காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தார். அவரது திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அவரது திட்டம் குறித்து ஆலோசிக்கச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

திக்விஜய சிங்
காங்கிரஸ் தொடர்பாக பிரசாந்த் கிஷோரின் பகுப்பாய்வு சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்த திக்விஜய சிங். அவர் கட்சியில் சேருவதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் திட்டம் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோரின் பகுப்பாய்வுகளை விவரிக்கும் திக்விஜய சிங், "அவர் ஒரு புள்ளிவிவர நிபுணர். எங்களுக்குத் தெரியாத, ஒன்றும் அவரிடம் புதிதாக இல்லை. அவர் கட்சியில் இணையவும் எவ்வித எதிர்ப்பும் இல்லை. மக்களும் கூட அவர்களை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.

உறுதியான ஆலோசனை
அவருடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. நான் அவருடன் தீவிர விவாதங்களை நடத்தி உள்ளேன். அவர் ஒரு அரசியல் ஆய்வாளர். அவரது ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குப் பயணித்துள்ளார். அவரிடம் எந்தவொரு கட்சி அல்லது கருத்தியலுக்கு அர்ப்பணிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் உறுதியான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவரது பிபிடி விளக்கமும் மிகவும் நன்றாக இருந்து உள்ளது

எதிர்ப்பு இல்லை
அவர் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி. இங்கு அவர் மீது சில சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், நாங்கள் திறந்த மனதுடனேயே அவரை அணுகுகிறோம். அவர் கட்சியில் இணைய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்" என்றார்.
Recommended Video

பிகே திட்டம்
பிகே காங்கிரஸ் தலைமைக்கு முன்வைத்த திட்டத்தில் "காங்கிரஸ் அதன் சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பத் திட்டம் தேவை. காங்கிரஸ் தலைவராகச் சோனியா காந்தி இருக்கும் அதேநேரம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வாரிய தலைவராக இருக்கலாம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

செயல் தலைவர்
நேரு குடும்பத்தை இல்லாத செயல் தலைவர் காங்கிரஸில் சாத்தியமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த திக்விஜய் சிங், "காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவர் என்று எந்தவொரு போஸ்டிங்கும் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சி தான். இந்த விவகாரத்தில் எனக்கு சில தனிப்பட்ட கருத்துகள் உள்ளது. ஆனால், அதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது" என்று கூறினார்.

நேரு குடும்பம்
நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்குக் கட்சித் தலைமை வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த திக்விஜய் சிங், "தற்போது தேர்தல் தேதி உட்கட்சி தேர்தல் நடைமுறைகள் நடந்து வருகிறது. இதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தொண்டர்கள் நேரு குடும்பத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை வழிநடத்தத் தேவையான அனைத்து தகுதிகளும் ராகுல் காந்தியிடம் உள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி மனசாட்சி உள்ளவர். கட்சியில் அவருக்குப் பெரியளவில் ஆதரவாக இருந்தாலும் 2019இல் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்தார். கடந்த காலங்களில் அவர் தோல்வியைச் சந்தித்து இருக்கலாம். ஆனால் அவர் அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாகச் சரியானவர். அனைவரையும் மதிக்கும் நவீன, மதச்சார்பற்ற, சோசலிஸ்ட்" என்று தெரிவித்தார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications