காங்கிரஸுக்கு எத்தனை இடம் கிடைக்கும் தெரியுமா? ராகுல் காந்தி கனவில் இடியை தூக்கிப் போட்ட மோடி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 சீட் கூட கிடைக்காது; உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட தேறாது என பிரதமர் மோடி தமது கணிப்பை தெரிவித்துள்ளார்.
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, மே 13 என 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக India Today சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என தேர்தல் பணியாற்றி வருகிறோம். காங்கிரஸ் கட்சியால் ஒரு காலத்திலும் இந்த இடங்களைப் பெறவே முடியாது.
காங்கிரஸின் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டு விரட்டப்பட்டுவிட்டார். அதனால்தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேசத்து மக்கள் இப்போது வயநாட்டை விட்டு ராகுல் ஓடிவந்தது தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். இதுவரை அமேதி தொகுதி பக்கம் கூட ராகுல் காந்தி தலைவைத்துப் படுக்கவே இல்லையே..
உத்தரப்பிரதேசத்து மக்கள் ஒரு போதும் வாரிசு அரசியலை ஏற்கவே மாட்டார்கள். மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய மாற்று நம்பிக்கையை மாற்று சக்தியை உ.பி. மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தின் வளர்ச்சித் திட்டங்களையும் அனுபவிக்கின்றனர்.
காசியின் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக என்னுடைய தாயார் என்னிடம் கேள்வி எழுப்பினார். அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி அரசு இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றேன். உ.பி.யில் பாஜக ஆட்சி அமைத்ததும் காசியை மேம்படுத்துவேன் என்றேன். தற்போது அதை செய்து கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு சமமாக அல்லது நெருக்கமாக மாநில கட்சிகள் தேர்தலில் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என சரத்பவார் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவை தனித்து எதிர்கொள்ள முடியாது என்பதையே சரத்பவாரின் கருத்துகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி











Click it and Unblock the Notifications