டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடுத்தது முட்டை.. ஆனா இந்த காங்கிரஸ் செய்யும் வேலையை பாருங்க.. கடுப்பில் கையை பிசையும் ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    டெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று, பலரும் கணித்திருக்க கூடும். ஆனால், பாஜக இந்த அளவுக்கு அதிக தொகுதிகளை வெல்லும் என பல எக்ஸிட் போல்கள் சொல்லவில்லை. ஆனால், அது நடந்திருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் என்றால் நம்ப முடிகிறதா?

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி என்பது போல டிரெண்ட் இருந்தாலும்கூட, பல விஐபி தொகுதிகளில், பாஜக கடும் போட்டியை கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

    டெல்லியில் மும்முனை போட்டி நிலவுவது, ஆம் ஆத்மிக்குதான் பாதகமாகியுள்ளது. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்காவிட்டாலும்கூட, அக்கட்சியின் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

    என்ன தான் ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு...? சோதனை மேல் சோதனை வர என்ன காரணம்? என்ன தான் ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு...? சோதனை மேல் சோதனை வர என்ன காரணம்?

    நிலைமைகள்

    நிலைமைகள்

    இத்தகைய போட்டிகளால்தான் பாஜக வடக்கு டெல்லியில் மாடல் டவுன் மற்றும் கரவால் நகர், துவாரகாவில் துவாரகா மற்றும் கிருஷ்ணா நகர் மற்றும் மேற்கு டெல்லியில் மோதி நகர். முஸ்லீம் பெரும்பான்மை பகுதியை கொண்ட பல்லிமரன், ஓக்லா உள்ளிட்ட பல இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல வேண்டிய இந்த ஓட்டுக்களை, காங்கிரஸ் பிரித்தது இதற்கு முக்கிய காரணம்.

    மிக நெருக்கம்

    மிக நெருக்கம்

    பல்லிமரானில், ஆம் ஆத்மி கட்சியின் இம்ரான் உசேன் முன்னிலையில் இருக்கிறார், ஆனால் வாக்கு வித்தியாசம் மிக நெருக்கமாக உள்ளது. மூன்று கட்சிகளுக்கும் இடையில் முன்னணி மாறி மாறி வருகிறது. ஓக்லாவில், பாஜக வேட்பாளர் பிரம்மா சிங், ஆம் ஆத்மி கட்சியின் அமனத்துல்லாகானை விட முன்னணியில் உள்ளார். இங்கு ஆம் ஆத்மிக்கு செல்ல வேண்டிய இஸ்லாமியர் ஓட்டுக்களை காங்கிரஸ் பகிர்ந்து கொண்டுள்ளது.

    விஐபிகள்

    விஐபிகள்

    மாடல் டவுனில், முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சரும் பாஜக வேட்பாளருமான கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் அகிலேஷ் பதி திரிபாதி மற்றும் காங்கிரசின் அகன்ஷா ஓலா ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார். ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரான சிஸ் ராம் ஓலாவின் மகள் இவர் ஆகும். இவரது பிரபலத்துவம், கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது ஆம் ஆத்மிக்கு வாக்குகளை குறைத்துள்ளது.

    பிரபலங்கள்

    பிரபலங்கள்

    துவாரகாவில், பாஜகவின் பர்த்யூம்ன் ராஜ்புத் ஆம் ஆத்மி கட்சியின் வினய் மிஸ்ரா மற்றும் மற்றொரு முன்னாள் ஆம் ஆத்மி தலைவரான காங்கிரசின் ஆதர்ஷ் சாஸ்திரி ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார். மோதி மகரில், பாஜகவைச் சேர்ந்த சுபாஸ் சச்ச்தேவா, ஆம் ஆத்மி கட்சியின் சிவ் சரண் கோயல் மற்றும் காங்கிரஸின் ரமேஷ் பாப்லி ஆகியோரைவிட முன்னிலை வகிக்கிறார். அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அரவிந்த் குமாரை காங்கிரஸ் கரவால் நகரில் வேட்பாளராக்கியது. ஆனால் இங்கு பாஜகவைச் சேர்ந்த மோகன் சிங் பிஷ்த் முன்னிலை வகிக்கிறார். காங்கிரசின் பிரபலமான அந்த வேட்பாளர், ஆம் ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதக்கிற்கு செல்லும் வாக்குகளை பிரித்துவிட்டார்.

    கிருஷ்ணா நகர்

    கிருஷ்ணா நகர்

    கிருஷ்ணா நகர் இப்படியான மற்றொரு தொகுதியாகும், அங்கு காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். மூத்த தலைவர் டாக்டர். அசோக் குமார் வாலியா காங்கிரஸிலிருந்து களமிறங்கி உள்ளார், பாஜகவின் டாக்டர் அனில் கோயல் வாலியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எஸ்.கே.பாகாவை விட இங்கு முன்னிலை வகிக்கிறார். அனில் கோயல் வாலியா முன்னாள் அமைச்சரும் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவருமாவார்.

    English summary
    Congress spoils AAP's big lead in Delhi as it gets Muslims votes considerably.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X