இந்தியா முழுவதும் மின் கட்டணம் உயரப்போகுது.. நேரத்திற்கு ஒரு கட்டணம்.. புதிய நடைமுறை எப்படி?
டெல்லி: காலை மற்றும் மாலையில் பீக் ஹவர்ஸ் நேரங்களில் அதிக மின்சாரம் பயன்படுத்தினால் தொழிற்சாலைகளுக்கு வரும் 2024 ஏப்ரல் 1 முதல் 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் பொதுமக்களுக்கு பீக் அவர்ஸில் அதிக மின்சாரம் பயன்படுத்தினால் 2025 ஏப்ரல் 1 முதல் 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மின்சார விதிகளில் மத்திய மின் அமைச்சகம் அண்மையில் இதற்கான திருத்தம் செய்து கட்டாயம் ஆக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர், விவசாயிகள் தவிர- மற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் நாள் நேர (ToD) கட்டண விதிகளை மத்திய அரசு திருத்தி உள்ளது
அதன்படியே 2024 ஏப்ரல் 1 முதல் அதிகபட்சமாக 10 கிலோவாட் மற்றும் அதற்கும் அதிகமான தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ToD கட்டணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் ஏப்ரல் 1, 2025 முதல் பீக் அவர்ஸில் புதிய கட்டண மாறுபாடு கட்டணம் மற்ற பொதுமக்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளதாம். இதற்காக மத்திய மின்துறை அமைச்சகம் விதிகளை திருத்தி உள்ளது.
இந்த டிஓடி கட்டணம் என்பதற்கு பொருள் என்னவென்றால், நாள் முழுவதும் மின்சாரம் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அந்த நாளில் பீக் அவர்ஸ் (உச்சகட்ட மின் தேவை உள்ள நேரம்) நேரத்திற்கு ஏற்ப ஆற்றல் கட்டணங்கள் மாறுபடும். கட்டணங்கள் இரவில் குறைவாகவும், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நேரத்திலும் குறைவாக இருக்கும். அதே சமயம் பீக் ஹவர்ஸின் போது விலை அதிகமாக இருக்கும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர்ஸாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பீக் ஹவர்ஸாகவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவேஅறிவித்துள்ளது. இது தொடர்பான கட்டண உத்தரவின்படி, பீக் ஹவர்ஸில் மின் கட்டணம் 25 சதவீதம் அதிகமாக இருக்கும். அதே சமயம் பீக் ஹவர்ஸ் அல்லாத நேரங்களில் 5 சதவீதம் கட்டணம் குறைவாக இருக்கும்.
யாருக்கு எல்லாம் பொருந்தும்: விவசாயிகள், தற்காலிக மற்றும் பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் தவிர அனைத்து HT மின் நுகர்வோருக்கும் ToD கட்டணம் பொருந்தும். HT மின் நுகர்வோர் யார் என்றால் 415 வோல்ட் மற்றும் 33,000 வோல்ட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் ஆவார்.
இதனிடையே மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், ToD கட்டணம் நுகர்வோர் மற்றும் மின்சாரம் வழங்குபவர்களுக்கு நல்ல பலன் தரும். பீக் அவர்ஸ்க்கு ஒரு கட்டணம், சூரிய ஒளி இருக்கும் நேரம் ஒரு கட்டணம் மற்றும் சாதாரண நேரங்களுக்கு ஒரு கடட்ணம் என தனித்தனி கட்டணங்கள் இருக்கும். இதுவே ToD கட்டணங்கள் ஆகும். இதன் மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை குறைத்துக்கொள்ள முடியும்" என்றார்.
இதனிடையே மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திருத்ததிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீக் அவர்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நலச் செயலாளர் கே.கதிர்மதியோன் கூறுகையில், "உள்நாட்டு மற்றும் விவசாய நுகர்வோருக்கு வரி விதிப்பை அமல்படுத்தக் கூடாது. வழக்கமாக, மாலை நேரங்களில் வீடுகளில் விளக்குகள், டிவிகள், மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் போது மின் நுகர்வு அதிகமாக இருக்கும். உள்நாட்டு மின் பயன்பாட்டை தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருடன் ஒப்பிடக்கூடாது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும்" என்றார்.
அதேநேரம் ஸ்மார்ட் மீட்டரில் கணக்கெடுப்பு விதிகளையும் மத்திய அரசு எளிமைப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மின் கட்டண விஷயத்தில் விதிக்கப்படும் அபராதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் 2024 மற்றும் 2025 இல் அமலுக்கு வந்தால், பீக் அவர்ஸ் நேரத்தில் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். அப்படி ஒருநிலை வந்தால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஸ்மார்ட் மீட்டர்களை நாம் பார்க்க வேண்டும் . மின் கட்டணம் எப்படி இருக்கும் என்பதை அப்போது தான் நமக்கு தெரியவரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications