ரோடு சும்மா வழவழன்னு இருக்கனும்.. ஹேமமாலினி கன்னம் மாதிரி! வம்பாய் பேசி வாண்டடாய் சிக்கிய எம்எல்ஏ!
டெல்லி: சாலைகள் ஹேமமாலினி கன்னங்களைப் போல் இருக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. சாலையை ஒப்பிடுவதற்கு ஒரு பெண்ணின் கன்னம் தான் கிடைத்ததா என விளாசி வருகின்றனர் அரசியல்வாதிகள்.
தமிழ் திரை உலகில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து தென்னிந்திய மொழிகளைக் கடந்து பாலிவுட்டில் கால் பதித்து கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஹேமமாலினி. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர்.

பாஜக சார்பில் எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அதே நேரத்தில் சர்ச்சை வளையங்களில் அவர் சிக்குவதும் வழக்கம். அவர் பேசுகிறாரோ இல்லையோ அவரைப் பற்றி யாராவது பேசி பிரச்சினையை கிளப்பி விடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் தற்போது ஹேமமாலினியை சுற்றி ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. சாலைகள் ஹேமமாலினியில் கன்னங்களைப் போல மென்மையாக்குவேன் என ஆம் ஆத்மி எம்எல்ஏ பல்யான் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி உத்தம்நகர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவான நரேஷ் பல்யான் பேசிய வீடியோ தான் இந்த சர்ச்சைக்கு காரணம். அந்த வீடியோவில் பேசியுள்ள எம்எல்ஏ நரேஷ் பல்யான் இந்த மாதம் 35 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் விரைவாக முடிக்கப்படும். உத்தமகரின் சாலைகள் ஹேமமாலினி கன்னங்களைப் போல மாறும் எனக் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பேசிய டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான பிரவீன் சங்கர் கபூர், இந்த மாதம் 35ஆம் தேதிக்குள் சாலைகள் சீரமைக்கப்படும் என்று கூறி பெண்களை அவமரியாதை செய்ததோடு அப்பகுதி மக்களையும் அவமானப்படுத்தி இருக்கிறார் அந்த எம்எல்ஏ. பெண்களை அவதூறாக பேசிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கட்சியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து பேசி உள்ள எம்பி ஆன ஸ்வாதி மலிவால், ஹேமமாலினியின் கன்னங்களைப் போல சாலைகளை மாற்றுவேன் என உத்தம் நகர் எம்எல்ஏ நரேஷ் பல்யான் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவர் மீது எவ்வளவு கண்டனம் எழுந்தாலும் அது போதாது. இத்தனை நாட்கள் அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தபோது அவர் எங்கே சென்றிருந்தார். பெண்களை போக பொருளாக கருதும் மலிவான சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த சமூகத்தில் இடமில்லை. அவர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
வட இந்திய அரசியல்வாதிகள் சாலைகளில் தரத்துக்கு நடிகைகளின் கன்னங்களை உவமையாக குறிப்பிடுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் சாலைகளை பாலிவுட் நடிகையான ஹேம மாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியது அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல உத்தர பிரதேச அமைச்சர் ஒருவரும் பேசி வம்பில் மாட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அமைச்சரான ராஜேந்திர சிங் குதா, தனது தொகுதி மக்களை சந்திக்க சென்ற போது சாலைகள் மிக மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அப்போது அவர்களை சிரிக்க வைப்பதாக நினைத்து அதிகாரிகளை அழைத்து சாலைகளை பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப்பின் கன்னங்களைப் போல வழவழப்பாக அமைக்க வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications