குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: 4 விமான படை அதிகாரிகள் உள்பட 6 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த 13 பேரின் உடல்களும் காட்டேரி பகுதியிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சூலூர் விமான படை
இதையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக சூலூர் விமான படை தளத்திற்கு நேற்று முன் தினம் கொண்டு வரப்பட்டது. சூலூரிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட 13 பேரின் உடல்களில் பிபின் ராவத், மதுலிகா மற்றும் லக்பிந்தர் சிங் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டும் டிஎன்ஏ மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.

முழு ராணுவ மரியாதை
இதையடுத்து அந்த 3 பேரின் உடல்கள் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன. மற்ற 10 பேரின் உடல்கள் அடையாம் காணப்படவில்லை. இதற்கு காரணம் அவை முழுவதும் எரிந்து விட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது. இதனால் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

6 பேரின் உடல்கள்
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிபின் ராவத்தின் தனி பாதுகாவலர்களான லான்ஸ் நாயக் பி சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆரிய இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும் விமான படையை சேர்ந்த 4 அதிகாரிகளின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
Recommended Video

மரபணு பரிசோதனை
அடையாளம் காணப்பட்ட 6 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையத் தொடர்ந்து 6 வீரர்களின் உடல்களும் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படவுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த மறஅர 4 பேரின் உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications