டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 பேரில் ஒருவர் மரணம்.. மெஸ்கோவில் கொடூரம்.. பிரேசிலில் 4190 பேர் மரணம்.. இந்தியாவில் புதிய உச்சம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அங்கு கவலை அளிக்கும் வகையில் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவிலோ பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு நாள் பாதிப்பில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 131,893 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 134,499,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,914,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 108,298,087 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் உலகில் தற்போது 23,287,272 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

உலகிலேயே உச்சபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 131,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,057,954 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 802 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 167,694 ஆக உயர்ந்துள்ளது.

மரணம்

மரணம்

இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 89,293 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதனால் பிரேசிலில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,286,324 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,190 பேர் மரணம் அடைந்தனர். பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 345,287 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இந்தியா பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 78,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,715,453 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 994 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 573,842 ஆக உயர்ந்துள்ளது.

உச்சம்

உச்சம்

துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,689,866 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 258 பேர் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 33,201 ஆக உயர்ந்துள்ளது.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

பிரேசில், அமெரிக்கா, போலந்து, இந்தியா, மெக்ஸிகோ, இத்தாலி, உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. மெக்ஸிகோவில் தான் கொடூரமாக உள்ளது. அங்கு 10 பேரில் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகும் நிலை உள்ளது. அதாவது மொத்தம் 596 பேர் நேற்று பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் என்றால் 5499 ஆகும்.

English summary
corona epidemic in Brazil killed 4,190 people in a single day. India tops the list in terms of one-day vulnerability, with corona confirmed for 131,893 people in a single day in India yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X