நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. திடீரென அதிகரிப்பது ஏன்? என்ன செய்ய வேண்டும்?
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவானது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது கொரோனா பாதிப்பு திடீரென வேகம் எடுப்பது ஏன்? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கிட்டதட்ட மக்கள் மறந்து போகும் அளவிற்கு இயல்பு வாழ்க்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை பல மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று முன் தினம், 2,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது.

மீண்டும் அதிகரிப்பு
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களுக்கு சற்று கலக்கத்தை கொடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பு எற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து எல்லாம் மீண்டு மக்கள் தற்போது ஆசுவாசம் அடைந்துள்ள நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் கொரோனா மக்களுக்கு சற்று கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது.

டெல்லி, கேரளாவில்
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து மக்களை கலங்க வைத்துள்ளது. அதேபோல், கேரளா, மகாராஷ்டிரா கர்நாடகம், குஜராத், அரியானா, இமாசலபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மூன்று இலக்க எண்களை எட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்ற கேள்வி மக்களுக்கு எழாமலும் இல்லை.

அதிகரிக்க காரணம் என்ன?
தற்போது மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு புதிய வகை எக்ஸ்பிபி.1.16 வைரஸ்கள்தான் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ்கள் மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளன. அதுபோக தற்போது வேகமாக பரவும் இந்த வைரஸ், தடுப்பூசி மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறனை கொண்டிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறும் காரணமாக உள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பால் 48 மணி நேரத்துக்கு கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி இருக்கும். எனினும் , இந்த வைரஸ் பாதிப்பால் மக்களுக்குப் பெரிய அளவில் தீங்கு ஏற்படுவதாக தகவல் இல்லை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* மாஸ்க் அணிதல்; கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தொற்று பாதிப்பு அதிகரிபால் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
* சமூக இடைவெளி: அதேபோல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
* கைகளை அடிக்கடி கழுவதல்: அடிக்கடி கைகளை கழுவதல் வேண்டும். முகம், வாய், மூக்கு போன்றவற்றை பொது இடங்களில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* கூட்டமான நெரிசல் மிக்க இடங்களுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்
* தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பின் தீவிரத்தை கட்டுப்படுத்துவது தடுப்பூசிதான் சிறந்த வழியாகும்.
* சுய தனிமை; கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியான மருத்துவ ஆலோசனை பெறுவதோடு சுய தனிமையை கடைபிடிப்பது அவசியம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் .
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications