70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி... சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு பாராட்டு..!
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை எட்டுவதற்காக உழைத்த அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என்றும் இதன் மூலம் கொரோனாவை இந்தியா வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10 கோடி தடுப்பூசி செலுத்துவதற்கு 85 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் 20 கோடியை தொட 45 நாட்கள் ஆனதாகவும் கூறியிருக்கிறார். மேலும், 30 கோடி என்ற இலக்கை எட்ட 29 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியிருக்கிறார்.
மேலும், 30 கோடி டோஸ்களில் இருந்து 40 கோடியை எட்ட 24 நாட்கள் எடுத்துக்கொண்டதாகவும் ஆகஸ்ட் 6-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 50 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதேபோல் 60 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைய 19 நாட்கள் ஆனதாகவும் அடுத்ததாக 70 கோடியை எட்ட வெறும் 13 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.
இதேபோல் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்துவோர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்கச் செய்தது.
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தற்போதைய நிலையில் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் தெரிவித்து அதை தவிர்த்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications