இனி ஒவ்வொரு நாளும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாட்கள்.. இந்தியாவுக்கு அவசர தேவை இவைதான்!
டெல்லி: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையல் இனி ஒவ்வொரு நாளும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாட்கள்... இந்தியாவுக்கு அவசர தேவை தற்காலிக மருத்துவமனைகள், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள்.. முடிந்தவரை நிறைய வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மாலை நிலவரப்படி 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்னர்.

மிக கவனம் தேவை
எனவே இனி வரும் 3 வாரங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய வாரங்கள் ஆகும். குறிப்பாக இனி ஒவ்வாரு நாளுமே மிக ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டிய நாட்கள் ஆகும். ஏனெனில் இனிமேல் மற்ற நாடுகளை போல் வேகமாக இந்தியாவில் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது. எனினும் இது தொடர்பாக மக்களிடையே அச்சத்தையோ பீதியையோ ஏற்படுத்தாமல் முன்னேற்பாடு செய்தாக வேண்டும்.

மிக கவனம் தேவை
எனவே இனி வரும் 3 வாரங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய வாரங்கள் ஆகும். குறிப்பாக இனி ஒவ்வாரு நாளுமே மிக ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டிய நாட்கள் ஆகும். ஏனெனில் இனிமேல் மற்ற நாடுகளை போல் வேகமாக இந்தியாவில் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது. எனினும் இது தொடர்பாக மக்களிடையே அச்சத்தையோ பீதியையோ ஏற்படுத்தாமல் முன்னேற்பாடு செய்தாக வேண்டும்.

தனிமைப்படுத்துதல்
ஆனால் அதற்கு நிறைய நேரம் இல்லை என்பதால் உடனடியாக சில விஷயங்களை மத்திய அரசு செய்தாக வேண்டும். அதில் ஒரு நடவடிக்கை தான் ஊரடங்கு உத்தரவு. பேருந்து, ரயில் பயணங்களை தடுத்து நிறுத்துவது. மக்களை தனிமைப்படுத்துவது, கைகளை கழுவது இருமும் போது தும்மல் வரும் போது துணியால் கைகளை மூடி தும்ம சொல்வது, கொரோனா பாதித்தவர்கள் வெளியில் நடமாடவிடமால் தனிமைப்படுத்துவது போன்றவை. மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வைப்பது. இதுபோன்ற அரசின் நடவடிக்கைகள் பரவுவதை தடுக்கும்.

சுகாதார வசதிகள் தேவை
அதேநேரம் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் சில நாட்களில் மட்டும் சுமார் 20000 பேருக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற நாடுகளைப் போல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் அதற்கு ஏற்ப சுகாதார வசதிகள் இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும். இதன்படி உடனடியாக எல்லா மாநிலங்களிலும் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகிறது. குறிப்பாக எங்கு பாதிப்பு அதிகம் உள்ளதோ அங்கு தற்காலிகமருத்துவமனை ஏற்படுத்த வேண்டும்.

அவசர சிகிச்சை பிரிவு
இதேபோல் தென்கொரியா செய்ததை போல் ஒரே நாளில் பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ சோதனை செய்யும் அளவுக்கு சோதனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மொத்தமாகவே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதை உடனே அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விலகி இருத்தல்
எவ்வளவு முடிமேயா அவ்வளவு (நிறைய) வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது.. இதெல்லாம் அவசர அவசிய தேவைகள் ஆகும். இதேபோல் சோசியல் டிஸ்டன்சிங் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய விலகி இருத்தலே ஒருவரை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்பதால் இதில் கவனம் செலுத்த வேண்டிய அவசர அவசியம் ஆகும். இவை எல்லாம் மருத்துவர்கள் சொன்ன தகவல்கள் ஆகும்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications