இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை- 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 27,892 ஆகும். இன்று ஒரே நாளில் 381 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6184. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 872. தற்போதைய நிலையில் 20,835 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் என்பது 22.17% ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவர் கூட புதியதாக பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் கோண்டியா, கர்நாடகாவின் தேவங்கரே, பீகாரின் லாகி சராய் மாவட்டங்களில் புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Recommended Video
கடந்த 14 நாட்களில் 85 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் சமூகப் பரவலே இல்லை. அதேபோல் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் என்று எதுவும் வரையறுக்கவும் இல்லை. இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications