இந்தியாவில் 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. ஒரே நாளில் 488 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் நோய்த் தொற்றுக்கு 488 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்
டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது..
Recommended Video
கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று ஓரளவு குறைந்துள்ளது.. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கை இதுதான்:

பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.. கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.38 லட்சமாக இருந்தது... இது அடுத்தநாள் 2.82 லட்சமாகவும், அதற்கு அடுத்த நாள், 3.17 லட்சமாகவும் உயர்ந்தது.. நேற்று முன்தினம் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 3.47 லட்சமாக காணப்பட்டது.. இந்த எண்ணிக்கைதான் நேற்றை தினம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

இந்தியா
நேற்று முன்தினம் 19,35,912 கொரோனா டெஸ்ட்கள் செய்யப்பட்டிருந்தன.. இதன்மூலம் தினசரி கேஸ்களின் பாதிப்பானது, 17.94 சதவீதத்தில் இருந்து 17.22 ஆக குறைந்தது.. இந்தியாவிலேயே தொற்று வைரஸ் அதிகமாக பாதித்த முதல்மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.. மொத்தம் 48,270 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்... புனே நகரத்தில் ஒருநாள் பாதிப்பு 16,618 ஆக உயர்ந்துள்ளது..

கேரளா
இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 48,049 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. கேரளாவில் 41,668 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் தொற்று பாதிப்பு 29,870 ஆக உயர்ந்துள்ளது.. குஜராத் மாநிலத்தில் 21,225 பேருக்கும் ராஜஸ்தானில் 16,878 பேருக்கும், உபியில் 16,159 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.... ஒரே நாளில் கொரோனாவைரஸுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..

ஒமிக்ரான் வைரஸ்
இப்போதைக்கு 3,63,1482 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.. தற்போது 21,13,365 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.. அதேபோல ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது... நாடு முழுவதும் நேற்று 67,49,746 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.. இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 கோடியே 16 லட்சத்தை தாண்டிவிட்டது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications