டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்.. டெல்லி மருத்துவமனையில் பலி.. கலங்கடிக்கும் பாச போராட்டம்!

டெல்லியில் மத மாநாட்டில் கலந்து கொண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தமிழர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத மாநாட்டில் கலந்து கொண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தமிழர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    இந்தியாவின் 50 சதவிகித மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது

    டெல்லியில் நடத்தப்பட்ட மத மாநாடு ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு நாடு முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு மார்ச் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது .

    மத அமைப்பு ஒன்று மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் வருடா வருடம் நடக்கும்.டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது.

    மத கோட்டம்

    மத கோட்டம்

    மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு தற்போது நாடு முழுக்க கொரோனா தாக்கி உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 1400 பேர் கலந்து கொண்டனர். இதில் எல்லோரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் சிகிச்சை

    டெல்லியில் சிகிச்சை

    இந்த கூட்டத்திற்கு சென்ற தமிழர்கள் பலர் தமிழகம் திரும்பாமல் டெல்லியிலேயே தங்கிவிட்டனர். கிட்டத்தட்ட 300 பேர் வரை டெல்லியில் இப்படி தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் முதலில் டெல்லியில் அந்த வழிபாட்டு தளத்திற்கு உள்ளேயே இருந்தனர். அதன்பின் போலீஸ் மூலம் இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, டெல்லியின் தீன் தயாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பலி அடைந்தார்

    பலி அடைந்தார்

    இந்த நிலையில் டெல்லியின் தீன் தயாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தமிழர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இவர் விருத்தாச்சலத்தின் தாஷ்கண்ட் நகரை சேர்ந்தவர். இவருடன் இவரின் மகனும் பக்கத்து அறையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு இந்த தகவல் மறுநாள்தான் தெரிவிக்கப்பட்டது.

    பார்க்க முடியவில்லை

    பார்க்க முடியவில்லை

    மறுநாள் அப்பாவின் மரணம் தெரிந்து வேகமாக அப்பாவை பார்க்க மகன் சென்றுள்ளார். ஆனால் அரசு விதிப்படி உறவினர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் அருகே செல்ல முடியாது. இதனால் கொரோனாவால் இறந்து போன அப்பாவின் உடலை மகனால் பார்க்க கூட முடியவில்லை. தூரத்தில் இருந்து மட்டும் அறைக்கு வெளியே இருந்து அப்பாவை பார்க்க மகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    குடும்பத்திற்கு தகவல்

    குடும்பத்திற்கு தகவல்

    இந்த தகவல் மறுநாள் அந்த நபரின் குடும்பத்திடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விருத்தாச்சாலம் வரை உடலை கொண்டு செல்வது குறித்து விவாதம் செய்யப்பட்டு, கடைசியில் உடலை டெல்லியிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நபரின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு, டெல்லியிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அவரின் சொந்த ஊரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+