கொரோனா.. இந்தியாவுக்கு இனிதான் ரிஸ்க்.. 10 மடங்கு அதிகரிக்க கூடும்.. நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இன்னும் 10 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த விஷயத்தில், உலகளாவிய அளவில் சீனா, ஐரோப்பாவுக்கு அடுத்து கொரோனா நோய் மையமாக இந்தியா மாறக்கூடும் என்றும், மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா.. தமிழகத்தின் நிலை என்ன?

    ஆசியாவின் பிற இடங்களில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை செய்யாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதுவரை 137 நோய்த்தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளது இந்தியாவில். எல்லைகளை மூடுவதன் மூலமும், நாட்டுக்குள் வரும் பயணிகளைச் சோதிப்பதன் மூலமும், பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கு உள்ளானவர்களின் தொடர்புகளை, கண்டுபிடிப்பதன் மூலமும் வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா தீவிரமாக முயற்சிக்கிறது.

    130 கோடி மக்கள் தொகை

    130 கோடி மக்கள் தொகை

    ஆனால் 1.3 பில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இது போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார்கள் சில வல்லுநர்கள். அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்ள நகரங்களில் பரவலான சோதனை மற்றும் சமூக விலகல் போன்ற பிற நடவடிக்கைகள் யதார்த்தத்தில் கை கொடுக்காதவை.

    10 மடங்கு

    10 மடங்கு

    கொரோனா வளர்ச்சி இப்போது வரை மெதுவாக இருந்தபோதிலும், ஏப்ரல் 15 க்குள் "இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருக்கும்" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைராலஜி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் டி. ஜேக்கப் ஜான் கூறியுள்ளார். "இது ஒரு பனிச்சரிவு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை," என்று போலியோ ஒழிப்பு தொடர்பான இந்திய அரசாங்க நிபுணர் ஆலோசனைக் குழுவின் தலைவரும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் தேசிய எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறிப்பு மையத்தின் தலைவருமான ஜான் மேலும் கூறியுள்ளார். "ஒவ்வொரு வாரமும் செல்லும்போது, ​​பனிச்சரிவு போல இந்த நோய் தாக்கம், மிக பெரிதாக வளர்ந்து வருகிறது." என்று அவர் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா நிலைமை

    மகாராஷ்டிரா நிலைமை

    ஆசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இதுவரை இந்தியா, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படவில்லை. மேலும், வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு, தெற்காசிய நாடுகளே சிறந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால், இந்தியாவின் ஒரு முக்கிய கவலை மகாராஷ்டிரா ஆகும், இது இந்தியாவில் அதிக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம். நிதி தலைநகரான மும்பை மற்றும் முக்கிய பங்குச் சந்தை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இங்குதான், இந்தியாவிலேயே, அதிகம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்கள் அதிகம் இருப்பது எளிதாக நோய்களை கடத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    இந்தியா vs சீனா

    இந்தியா vs சீனா

    இந்தியாவின் முக்கிய சவால் அதன் மக்கள்தொகை அடர்த்திதான். சீனாவில் சதுர கிலோமீட்டருக்கு 148 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில், ​​ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் 420 பேர் வாழ்கின்றனர். இந்தியாவின் நகரங்கள், குடிசைப் பகுதிகள், குறைந்த வருமானம் கொண்டோர் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் மிக மிக நெருக்கமாக அமைந்திருக்கும். சில இடங்களில் ஒரே கழிவறையை, நான்கு வீட்டுக்காரர்கள் பயன்படுத்தும் அளவுக்கு நமது நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் வசிக்கிறார்கள். இதுதான் மோசமான நிலைமை.

    ஏழைகள் நிலைமை

    ஏழைகள் நிலைமை

    நோய் அறிகுறியற்ற மக்களைக் கூட தென் கொரியாவால் சோதிக்க முடிந்தது, இந்தியாவின் மக்கள் தொகைக்கு இது மிகவும் கடினமானது என்று கூறுகிறார் டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட். இவர் டெல்லியை சேர்ந்த தொற்றுநோயியல் துணை பேராசிரியர். "சமூக விலகல் என்பது பெரும்பாலும் தற்காப்புக்காக பேசப்படும் ஒன்று, ஆனால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே இது நன்றாக வேலை செய்கிறது. ஏழைகள் அப்படி விலகி இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+