மே 3க்கு பின் புது விதிமுறைகள்.. ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரம் முன் ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு மே 3ம் தேதி தொடரும்.

ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனாலும் நாடு முழுக்க பெரும்பான்மை மாநிலங்களில் எப்போதும் போல ஊரடங்கு தொடர்கிறது. நாடு முழுக்க சில மாவட்டங்களில் மட்டும் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது .
இன்று பிற மாநிலங்களில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் இவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 4ம் தேதி இந்த ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்படும். பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இது தொடர்பான முழுமையான விவரம், புதிய விதிகள் தொடர்பான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலும் நாடு முழுக்க ஊரடங்கில் குறிப்பிடத்தகுந்த கட்டுப்பாட்டு தளர்வு கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications