கொரோனா: கர்நாடகாவில் மேலும் ஒருவர் பலி- உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். அதேபோல் மும்பையில் 85 வயது மருத்துவர் கொரோனா தாக்குதலால் பலியாகி உள்ளார். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 740 ஆக உயர்ந்துள்ளது.

    Coronavirus: death toll rise to 20; 727 cases in India

    இந்தியாவில் உயிரிழப்பும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்ததால் மொத்தம் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆனது. இதில் 16 மரணங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று உறுதி செய்தது.

    கேரளாவில் அதிகபட்சமாக 138 பேரும் மகாராஷ்டிராவில் 130 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 55, தெலுங்கானா 43; ராஜஸ்தான் 43; உத்தரப்பிரதேசத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி- 36; பஞ்சாப்; 29; தமிழகம்- 29; ஹரியானா 21 பேருக்கும் குஜராத்தில் 43 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 23; மேற்கு வங்கத்தில் 11; ஆந்திராவில் 10 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடகாவின் தும்கூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழந்தார். அதேபோல் மும்பையில் 85 வயது மருத்துவர் கொரோனா தாக்குதலால் பலியாகி உள்ளார்.இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 740.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+