டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமூக இடைவெளி இல்லை.. மதுவை ஆன்லைனில் டெலிவரி செய்யலாம்.. மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை

மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

Recommended Video

    Tasmac shops | தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட் அதிரடி உத்தரவு

    இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கூட இதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

    வீட்டு முன்பு பதாகை ஏந்துதல்.. ஆன்லைன் அரசியல் வகுப்புகள்.. லாக்டவுன் தந்த புதிய சிந்தனைகள்!வீட்டு முன்பு பதாகை ஏந்துதல்.. ஆன்லைன் அரசியல் வகுப்புகள்.. லாக்டவுன் தந்த புதிய சிந்தனைகள்!

    தமிழ்நாடு நிலை

    தமிழ்நாடு நிலை

    தமிழகம் முழுக்க நேற்று டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் முண்டி அடித்துக்கொண்டு சமூக இடைவெளி விடாமல் நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுக்க மதுக்கடை காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளின் இந்த முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    மதுக்கடை வழக்கு

    மதுக்கடை வழக்கு

    மதுக்கடைகளை இப்படி திறப்பது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும். மது குடிக்காத பொது மக்கள் இதனால் அவதிப்படும் நிலை ஏற்படும். அதனால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அனின்திதா மித்ரா வழக்கு தொடுத்து இருந்தார். அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், பிஆர் கவாய் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நீதிமன்றம் அறிவுரை

    நீதிமன்றம் அறிவுரை

    இந்த நிலையில் மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். நேரடியாக விற்பனை செய்வதை தவிர்க்க முயற்சிக்கலாம்.

    ஆன்லைன் அறிவுரை

    ஆன்லைன் அறிவுரை

    வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும். ஆனால் மது விற்பனை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை .எங்களுக்கு இதில் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. நாங்கள் இது தொடர்பாக அறிவுறுத்தல் மட்டுமே அளித்துள்ளோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    English summary
    Coronavirus: Deliver the alcohol in online, Supreme court state governments.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X