அசிம் பிரேம்ஜி முதல் அம்பானி வரை.. கோடிகளில் குவிந்த நிதி.. கொரோனாவிற்கு எதிராக திரண்ட தொழிலதிபர்கள்
வாஷிங்டன்: எங்கே பார்த்தாலும் பிணம்.. எதிலே பார்த்தாலும் பிணம்.. சேர்கள், டேபிள்களில்கூட பிணங்கள் பிளாஸ்டிக் கவர்களில் சுருண்டு கிடக்கின்றன.. ஊழியர்களின் ஓய்வறைகளிலும் நிற்க இடமின்றி பிணங்கள் நெருக்கி கொண்டு விழுந்து கிடக்கின்றன!! அமெரிக்காவின் டெட்ராயிடு நகர் ஆஸ்பத்திரியில்தான் இந்த அவசம் உள்ளது.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாக உலக நாடுகளை உச்சக்கட்ட பீதியில் ஆழ்த்தி வருகின்றன!!
Recommended Video
கொடூர கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது.. ஒருநாளைக்கு 100, 200 என்று இறந்து கொண்டிருந்தவர்கள் இன்று 2 ஆயிரம் பேர் இறக்கும் அளவுக்கு நிலைமை சீரியஸாகிவிட்டது.. அமெரிக்காவில் இது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
இது வரை இல்லாத அளவாக நேற்று தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,407 பேர் இறந்துள்ளதால் கடந்த இரண்டு நாளில் மட்டும் 4889 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அசிம் பிரேம்ஜி நிதி
இந்த கணக்கில் தற்போது இந்தியா முழுக்க பலர் இதில் நிவாரண நிதி அளிக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக இந்தியாவின் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் பலர் இதில் நிவாரண நிதி அளிக்க தொடங்கி உள்ளது. ஐடி துறையில் முன்னணியில் இருக்கும் விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி 1000 கோடி ரூபாய் இதற்காக அளித்து இருக்கிறார். அதேபோல் தங்கள் நிறுவன பணியாளர்கள் மூலம் அரசுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று கூறியுள்ளார்.
மேலும் விப்ரோ ஐடி நிறுவனம் (Software developer Wipro Limited) 100 கோடி ரூபாய் அளித்துள்ளது. விப்ரோ பொறியியல் நிறுவனம் ( Wipro Enterprises Limited ) 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளது .

முகேஷ் அம்பானி நிதி
அதேபோல் இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானி 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் அதிக ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் உள்ள குஜராத் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் 100 பெட்கள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை மும்பையில் அமைக்க உள்ளார். தினமும் 1 லட்சம் மாஸ்குகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்து உள்ளார்.

டாட்டா செய்த உதவி
டாட்டா நிறுவனத்தின் ரத்தன் டாட்டா 500 கோடி ரூபாய் அளித்துள்ளார். இதில் பாதுகாப்பு உடைகள், கிளவுஸ், வெண்டிலேட்டர், மாஸ்க் ஆகியவையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. டாட்டா நிறுவன தலைவர் என். சந்திரசேகரன் ஆயிரம் கோடி ரூபாய் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். வெண்டிலெட்டர்களை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் ஜுனேஜா மொத்தம் 51 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

டிவிஎஸ் நிறுவனம் உதவி
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்கி உள்ளது . இதன் தலைவர் ஸ்ரீனிவாசன் சர்வீஸ் தொண்டு நிறுவனம் மூலம் 5 கோடி ரூபாய் கூடுதலாக தமிழக அரசின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்திற்கு 10 லட்சம் பாதுகாப்பு உடைகளை டிவிஎஸ் அளிக்க உள்ளது. டிவிஎஸ் மூலம் தமிழகம் முழுக்க மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓலா நிறுவனம் 20 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அதன் நிறுவனர் பாவீஸ் அகர்வால் தன்னுடைய ஒரு வருட வருமானத்தை அளித்துள்ளார்.

ஓலா நிறுவனம் உதவி
அதேபோல் ஓலா நிறுவனம் கர்நாடகாவில் அவசர உதவிக்காக 500 கேப்களை அளித்துள்ளது. மஹிந்திரா வங்கி நிறுவனம் உதய் கோடாக் மொத்தம் 25 கோடி ரூபாய் அளித்துள்ளார். அந்த வங்கி 35 கோடி ரூபாய் அளித்துள்ளது . ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் 35 கோடி ரூபாய் அளித்துள்ளது . அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்தியா முழுக்க வெண்டிலேட்டர், மருந்துகள், மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினிகளை வழங்குகிறது.

நிப்பான் பெயிண்ட்ஸ் திட்டம்
நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனம் நாடு முழுக்க 1000 பெயிண்டர்களுக்கு நிவாரண நிதி வழங்கி உள்ளது. இது போக பாலிவுட் நடிகர்கள் பலரும் இதில் உதவி செய்து இருக்கிறார்கள்.நடிகர் அக்சய் குமார் மொத்தம் 25 கோடி ரூபாய் அளித்துள்ளார். பிசிசிஐ அமைப்பு 51 கோடி ரூபாய் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனா நிவாரண நிதிக்கு கோடிகள் குவிந்துள்ளது.












Click it and Unblock the Notifications