கொரோனா பீதி: கைகுலுக்கல், கட்டி அணைத்தல் வேண்டாம்.. வைரஸில் இருந்து தப்பிக்க வணக்கம் போடுங்க!
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். கைகுலுக்கல், கட்டி அணைத்தலை விட்டு விட்டு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்ல பிரபலங்களும் தொடங்கிவிட்டனர்.
Recommended Video
சீனாவை பிடித்து உலுக்கி வந்த கொரோனா வைரஸ் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் எப்படியோ 70 நாடுகளுக்கு பரவி விட்டது. அதாவது மொத்தமுள்ள 7 கண்டங்களில் அன்டார்டிகா கண்டத்தை தவிர ஏனைய கண்டங்களில் பரவி விட்டது.
இது ஒரு உயிர்கொல்லி வைரஸ் என்பதாலும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே கொரோனாவாக இருக்குமோ என்ற பீதி மக்களை தொற்றிக் கொண்டு விட்டது.

வேகம்
கொரோனா வைரஸை எப்படி தடுப்பது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. எனினும் சீனாவை விட வேகமாக மற்ற நாடுகளில் 8 மடங்கு பரவி வருகிறது. இது பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்வதால் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் பிரபலங்களும் தாங்கள் கைகுலுக்குவதையோ கட்டி அணைப்பதையோ நிறுத்திவிட்டனர்.

மெர்கல்
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெர்மன் நாட்டு ஏஞ்சலா மெர்கெல். அண்மையில் ஜெர்மன் நாட்டு அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபரை மெர்கல் சந்தித்தார். அப்போது அவர் சீஹோஃபரிடம் கைகொடுத்தார். ஆனால் கொரோனா பீதியால் சீஹோஃபர் கை கொடுக்காமல் தவிர்த்தார். எனவே இந்த சமயங்களில் நாம் ஒருவரை எப்படி வரவேற்பது என்பதை பார்ப்போம். இது ரொம்ப சிம்பிள்.

கைகுலுக்குதல்
பொதுமக்களாக இருந்தாலும் சரி , செலிபிரிட்டியாக இருந்தாலும் சரி, அரச பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி இரு கைகளையும் கூப்பி சிரித்து கொண்டே உடலை வளைத்து வணக்கம், நமஸ்தே என கூற வேண்டும். இதுதான் பாரம்பரிய பழக்கமாக இருந்தது. ஆனால் காலம் போக போக மேற்கத்திய பழக்கமான கைகுலுக்குதல், கட்டி அணைத்தலுக்கு சென்றுவிட்டோம். இது போல் செய்வதற்கு 5 காரணங்கள் உண்டு.

சுகாதாரம்
ஒன்றும் யாரையும் தொட்டு பேச வேண்டிய தேவை இருக்காது. இதன் மூலம் கொரோனா பரவுமோ என்ற அச்சமும் இருக்காது. யாராவது கைகுலுக்கும்போதும் கட்டி அணைக்கும் போதும் அதை தவிர்க்க நமஸ்தே சொல்லலாம். இதன் மூலம் எதிராளி நம்மை தவறாக நினைக்க மாட்டார். மூத்தவர்களை வரவேற்க இதுவே சிறந்த வழி. கட்டி அணைத்தலையும் முத்தமிடுதலையும் தவிர்த்து விடலாம். கடைசியாக சுகாதாரமான முறையில் ஒருவரை வரவேற்க கை கூப்பி சிரித்துக் கொண்டே உடலை வளைத்து வணக்கம் சொல்வதே சிறந்தது. என்ன இதுபோல் செய்வீர்களா?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications