டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அச்சத்தில் டெல்லி.. பள்ளிகள் கல்லூரிகள், திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் பள்ளிகள் கல்லூரிகள், திரையரங்குகளை வரும் மார்ச் 31 வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

    உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4716 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மதியம் நிலவரப்படி 73 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Coronavirus in india: Delhi Schools, Colleges, Cinemas Shut Till March 31

    அதிகபட்சமாக கேரளாவில் தான் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இந்தியா முழுவதும் தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சோதனை முடிவுகள் வெளியானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும் அச்சம் உள்ளது.

    இதையடுத்து கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சினிமா அரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

    Exclusive: பரவும் கொரோனா.. அச்சத்தில் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்களின் நடவடிக்கை என்ன? பரபர பெங்களூர்Exclusive: பரவும் கொரோனா.. அச்சத்தில் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்களின் நடவடிக்கை என்ன? பரபர பெங்களூர்

    டெல்லி அரசு ஏற்கனவே ஆரம்பப் பள்ளிகளை மூட உத்தரவிட்டிருந்தது. தற்போதைய நிலையில் தேர்வுகள் நடைபெறதா பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த வைரஸை நேற்று உலக சுகாதார அமைப்பு தொற்றுநோயாக அறிவித்தது. இன்று நள்ளிரவு முதல், இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து விசாக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Delhi Schools, Colleges, Cinemas Shut Till March 31 due to Coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X