எகிறும் தொற்று.. இந்தியாவில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா உறுதி.. மத்திய அமைச்சகம் தகவல்
இந்தியாவில் தொற்று சற்று கூடியுள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. நேற்று முன்தினம் 18,833 பேருக்கும், நேற்று 22,431 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய பாதிப்பானது சற்று கூடியுள்ளது..
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது.. ஆனாலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை...
மேலும் 3வது அலை பரவல் வரப்போவதாக எச்சரிக்கை வருவதால், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விடுமுறைகள்
இதனிடையே இந்தியாவில் அடுத்தடுத்த பண்டிகைகள் வர உள்ளதாலும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களையும் வெளிப்படுத்தி வருகிறது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், தொற்று மறுபடியும் இந்தியாவில் அதிகரித்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை
எனினும், ஒரு நாளைக்கு 4.5 முதல் 5 லட்சம் பாசிட்டிவ் கேஸ்கள் வந்தாலும், அதனை சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று மத்திய அரசும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில், இந்தியாவில் தொற்று விகித பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு
நேற்று முன்தினம் 18,833 பேருக்கும், நேற்று 22,431 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய பாதிப்பானது சற்று கூடியுள்ளது.. கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,39,15,589-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,85,706 கொரோனா டெஸ்ட்கள் செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது...

உயிரிழப்புகள்
இதன்மூலம் இதுவரை இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த டெஸ்ட்கள் 58 கோடியாக உயர்ந்துள்ளது.. அதேபோல, கொரோனா தடுப்பூசி இதுவரை 93.17 டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து ஒரே நாளில் 24963 பேர் குணமடைந்துள்ளனர்... இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33225221 ஆக உயர்ந்துள்ளது.. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 240221 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது...

உயிரிழப்பு
இந்தியாவில் இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... நேற்று ஒரு நாள் மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.48 லட்சத்தை தாண்டியது... பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,848,554 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

சிகிச்சை
உலகம் முழுவதும் கொரோனாவால் 237,507,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 214,601,222 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 18,063,218 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications