சரக்கு கடைகளில் லைனில் நிற்க வாடகைக்கு ஆள் பிடித்த குடிமகன்கள்.. கியூவில் தவித்த பெண்கள்.. தடியடி
டெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதை குடிமகன்கள் அப்படி ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி தீர்த்திருக்கின்றனர். ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தகிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள் வெளிப்படுத்தினர்.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலுமே மதுபான கடைகளும் இழுத்து மூடப்பட்டன.
மதுபான கடைகள் திடீரென இழுத்து மூடப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுபானங்களை கூடுதல் விலைக்கு வாங்கி குடித்தனர்; சிலர் மாற்று போதைவழிகளைத் தேடி மாண்டு போயினர். இன்னும் பலர் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலையும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் லாக்டவுன் மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இது குடிமகன்களை எல்லையில்லாத மகிழ்ச்சிக்கு தள்ளியது. ஆனால் பொதுமக்களை கடும் அதிருப்தி அடைய வைத்தது.

வாடகைக்கு ஆள் பிடித்த குடிமகன்கள்
மதுபான கடைகள் திறக்கப்பட்டது முதலே ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது பெங்களூரு பெருநகரம்தான். மதுபான கடைகள் முன்பு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு காத்திருந்தனர் குடிமகன்கள். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தனி கியூவில் தவம் கிடந்தனர் பெண்கள். பெங்களூருவில், லைனில் நிற்பதற்காக கூலிக்கு/ வாடகைக்கு ஆள்பிடித்து நிற்க வைத்த சம்பவங்களும் கூட நடந்திருக்கிறது. கர்நாடகாவின் பல இடங்களில் மதுகடைகள் திறக்கப்பட்டதை பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

மங்களகரமான வியாபாரம்
கர்நாடகாவின் கோலாரில் மதுவாங்க வரும்போதே பட்டாசுகளுடன் வந்து வெடித்தனர் குடிமகன்கள். கோலாரில் மதுபான கடை ஒன்றில் முதல் சரக்கு லட்சுமி அம்மாள் என்ற பெண்ணுக்குதான் கொடுக்கப்பட்டது. அவர் மதுபான பிரியர். முதன் முதலில் லட்சுமி என்ற பெயருடைய பெண்ணுக்கு சரக்கு கொடுப்பதால் வருமானம் அமோகமாக இருக்கும் என்பதால் இப்படி ஒரு நம்பிக்கையோடு சரக்கு விற்பனையை தொடங்கினார்களாம்.

கொல்கத்தாவில் தடியடி
கொல்கத்தாவிலும் மதுபான கடைகளில் அமோக கூட்டம் அள்ளியது. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் சரக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என தவித்து முண்டியடித்தனர். இதனால் தனிநபர் இடைவெளி என்பதெல்லாம் காணாமல் போனது. இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தடியடியும் நடத்தினர்.

உ.பியில் செம விற்பனை
உத்தரப்பிரதேசம் மட்டும் என்ன தொக்கா? நேற்று ஒரே நாளில் ரூ100 கோடிக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. வழக்கமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ70 கோடி முதல் ரூ 80 கோடி வரை விற்பனை இருக்குமாம். தலைநகர் லக்னோவில் மட்டுமே நேற்று ஒரே நாளில் ரூ6.3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இத்தனைக்கும் 4 மணிநேரம்தான் மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. சரக்குகள் இல்லாததால் உத்தரப்பிரதேசத்தில் பல கடைகள் திறந்த வேகத்தில் மூடப்பட்டுவிட்டன.

விஜயவாடா திணறியது
ஆந்திராவின் விஜயவாடாவில் வரலாறு காணாத கூட்டமாக மதுபான கடைகளை முண்டியத்தது குடிமகன்கள் கூட்டம். 2014-ம் ஆண்டு ஹூத் ஹூத் புயல் அடித்த மறுநாளே மதுபான கடைகள் முன்பு இப்படி ஒரு கூட்டம் திரண்டிருந்தது. அதைப் போன்ற ஒரு கூட்டம் இது என பெருமூச்சுவிட்டார் குடிமகன்.

ராஜஸ்தானில் இனி டோக்கன்
ராஜஸ்தானில் ஒவ்வொரு மதுபான கடைகளிலும் கடும் நெருக்கடி. என்ன செய்வது என்றே தெரியாமல் மதுபான கடையினர் விழிபிதுங்கி போயினர். இதனால் கடைகளை திறந்த 2 மணிநேரத்திலேயே மூடுவதற்கு கலால்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தற்போது கலால்துறை போலீசார் குடிமகன்களுக்கு டோக்கன் வழங்கி கூட்டத்தை ஒழுங்குபடுத்த இருக்கின்றனராம்.

வீடு தேடிவரும் சரக்குகள்
மகாராஷ்டிராவின் மும்பை, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் காலை முதலே குடிமகன்கள் பெரும் சோதனைக்குள்ளாகினர். மதுபான கடைகள் எப்போது திறக்கும் என்கிற முடிவை அரசுகள் அறிவிக்காமலேயே இழுத்தடித்தன. பின்னர் கடைகள் திறந்ததுதான் தாமதம்.. தகிக்கும் வெயிலில் வேர்த்து வியர்த்து கொட்ட வியர்வையில் நனைந்தபடியே சரக்குக்காக தவமாய் தவமிருந்தனர். மும்பையில் மாலை 3 மணிவரை காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பினர் குடிமகன்கள். சத்தீஸ்கரில் பச்சை நிற மண்டலங்களில் சரக்குகள் வீடு தேடி வருவதற்கான ஆப்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. சத்தீஸ்கரில் சில இடங்களில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications