டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா தாக்கம் சமூகப் பரவலாக இல்லை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சமூகப் பரவலாக இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    அது என்ன Herd Immunity? கொரோனாவை கட்டுபடுத்த இது பயன்படுமா?

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி 46,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,568 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Coronavirus: No community transmission in India, says Harsh Vardhan

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது ராக்கெட் அறிவியலைப் போன்றது அல்ல.

    நம்முடைய வாழ்வியல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதும் கொரோனாவுக்கு எதிரானதுதான். கை கழுவுதல் உள்ளிட்ட பழக்கங்கள் வைரஸ் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    தமிழகத்தில் 711 பகுதிகள் கன்டெய்ன்மென்ட் மண்டலங்களாக அறிவிப்பு.. எவை எவை.. இதோ முழுப் பட்டியல்! தமிழகத்தில் 711 பகுதிகள் கன்டெய்ன்மென்ட் மண்டலங்களாக அறிவிப்பு.. எவை எவை.. இதோ முழுப் பட்டியல்!

    வைரஸால் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டு இருக்கின்றன. லாக்டவுன் அமலில் உள்ள தற்போதைய காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் என்பது சமூகப் பரவலாக இன்னமும் மாறவில்லை. இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

    English summary
    Union Health Minister Harsh Vardhan said that the behavioural changes brought by the Coronavirus infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X