ஆதாரம் இல்லை.. கொரோனாவிற்கு பிளாஸ்மா தெரபி அளிப்பதா?.. எச்சரிக்கும் மத்திய அரசு.. புதிய சிக்கல்!
கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுக்க பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரகுயின் மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக எதிர்ப்பு சக்தி மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேபோல் சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பயன்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இந்த பிளாஸ்மா தெரபி பெரிய அளவில் பலன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது.

வெற்றி அடைந்தது
ஏற்கனவே தென்கொரியாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பலர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிகிச்சை முறை மிகவும் எளிமையானது ஆகும். பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும். அதாவது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குண்டமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும்.

எதிர்ப்பு சக்தி செல்கள்
இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் அவர்களின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும். அதன்படி கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து கொரோனா பாதித்த வேறு ஒரு நபருக்கு செலுத்துவார்கள். இதன் மூலம் கொரோனா பாதித்த அந்த நபர்கள் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்று குணமடைவார்கள். இதுதான் பிளாஸ்மா சிகிச்சை.

பல மாநிலம் அனுமதி
இந்த பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. கேரளா, தமிழகம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் ஏற்கனவே இந்த தெரபி பெரிய அளவில் நல்ல ரிசல்ட் காண்பிக்க தொடங்கி உள்ளது.

எச்சரிக்கை செய்தனர்
தமிழகமும் விரைவில் இதை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்மா தெரபி என்பது தற்போது சோதனை கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிராக பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

எச்சரிக்கை
இதில் இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதற்காக தேசிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி முடியும் வரை பிளாஸ்மா தெரபியை சோதனைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் பிளாஸ்மா தெரபியை முறையின்றி பயன்படுத்தினால், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூட வாய்ப்புள்ளது. இதனால் கவனமாக இருக்க வேண்டும், என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications