Omicron Coronavirus: இந்தியா இனி எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை
டெல்லி: இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ஓமிக்ரான் பரவல் பற்றி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓமிக்ரான் வேகமாக பரவுவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 6 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் மகாராஷ்டிராவில் மட்டும் இந்தியாவில் 54 ஓமிக்ரான் கேஸ்கள் உள்ளது.
இந்தியாவில் இதுவரை 34,740,275 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7,081 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மரணம்
இந்தியாவில் இதுவரை 477,422 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,171,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 91,382 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 151 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமிக்ரான்
11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஓமிக்ரான் இந்தியாவில் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா (54), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14), தெலுங்கானா (20), குஜராத் (9), கேரளா (11), ஆந்திர பிரதேசம் (1), சண்டிகர் (1), தமிழ்நாடு (1) மற்றும் மேற்கு வங்கம் (1) ஆகிய மாநிலங்களில் இதுவரை கேஸ்கள் பதிவாகி உள்ளது.

எச்சரிக்கை
இந்த நிலையில், இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ஓமிக்ரான் பரவல் பற்றி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓமிக்ரான் வேகமாக பரவுவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், நாம் இப்போதே மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

யு.கே மோசம்
யு.கேவில் நிலைமை மோசமானது போல இந்தியாவிலும் ஆகிவிட கூடாது. ஓமிக்ரான் குறித்த கூடுதல் டேட்டாக்கள் தேவை. நாட்டில் எந்த மூலையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் அங்கு உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும்.
Recommended Video

ஓமிக்ரான்
அங்கு ஓமிக்ரான் பரவுகிறதா என்று சோதிக்க வேண்டும். திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கு பின் ஓமிக்ரான் பரவல் காரணமாக இருக்கலாம். எந்த விஷயத்திற்கும் தயாராக இருப்பதே நல்லது. எதையும் தயார் செய்யாமல் சிக்கலில் மாட்டுவதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதே சிறந்தது என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications