கொரோனாவுக்கு உலக அளவில் 4,848,554 பேர் பலி.. இதுவரை 214,601,222 பேர் டிஸ்சார்ஜ்

உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,848,554 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

 Coronavirus positive case crosses 23 crores

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.48 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,848,554 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 237,507,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 214,601,222 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 18,063,218 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளில் 97,656 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 1667 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 34,468,497 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 45,016,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 33,914,465 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 21,463 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 433,622 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 33,217,637 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 21,532,558 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 15,044 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 451 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்..

பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 21,532,558 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 5,799,865 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 451 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,690,110, பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி தீவிரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர்.. எனவே, அந்தந்த நாடுகள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. மேலும், தடுப்புசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+