டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு சீல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு உள்ள தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உட்பட நாட்டின் 75 மாவட்டங்களை சீல் வைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா அடுத்த கட்டமாக தாக்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

Coronavirus: State governments advised to lockdown 75 districts

இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றன. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாநில செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

Coronavirus: State governments advised to lockdown 75 districts

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்குக்கான மக்களின் ஆதரவு குறித்து மாநில செயலாளர்கள் விவரித்தனர். கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக மாநிலங்களிடையேயான போக்குவரத்து ரத்து உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களுக்கு சீல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் அடங்கும். இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

துக்ளக் படிச்சுமா இப்படி.. ஒரே ஒரு வீடியோ போட்டார்.. அதையும் நீக்கிட்டாங்க.. நெட்டிசன்கள் கலாய்துக்ளக் படிச்சுமா இப்படி.. ஒரே ஒரு வீடியோ போட்டார்.. அதையும் நீக்கிட்டாங்க.. நெட்டிசன்கள் கலாய்

இந்த மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படும். எல்லைகள் சீல் வைக்கப்படும். மேலும் நாடு முழுவதும் சரக்கு ரயில் தவிர்த்த பிற ரயில் சேவைகளை மார்ச் 31வரை ரத்து செய்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த மாநிலங்களிடையேயான பொது போக்குவரத்தை வரும் 31-ந் தேதி வரை ரத்து செய்வது எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

English summary
The State governments advised to lockdown 75 districts where positive cases were reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X