இந்தியாவில் 125 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,093
டெல்லி: இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,093 என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,17,30,038. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 41,12,994.
கொரோனா 2வது அலை இந்தியாவை மிக மோசமாக தாக்கியது. கடந்த 4 மாதங்களில் அதாவது 125 நாட்களில் தற்போதுதான் ஒருநாள் பாதிப்பு 30,000 என்ற அளவில் குறைந்துள்ளது.

30,093 பேருக்கு பாதிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,093. நாட்டில் மார்ச் 16-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,093 ஆக இருந்தது. கடந்த மார்ச் 30-ந் தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு 354 பேர் மரணம் அடைந்தனர்.

ஆக்டிவ் கேஸ்கள் குறைவு
இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4,06,130 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97.32% ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள்
மேலும் இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 400க்கும் கீழே குறைந்துள்ளது. நாட்டில் திங்கள்கிழமையன்று மட்டும் மொத்தம் 374 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,14,482.

41 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,14,482. நாடு முழுவதும் இதுவரை 41,18,46,401 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications