3 சோன்கள்.. என்னென்ன தளர்வுகள்.. என்ன கட்டுப்பாடுகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா மொத்தமாக 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா மொத்தமாக 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால்
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்கள் பிரிப்பு
மொத்தம் கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்காக இந்தியாவை மூன்று சோன்களாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பை அடிப்படையாக வைத்து மொத்தம் மூன்று சோன்களாக பகுதிகளை வகைப்படுத்தி உள்ளது. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஒரு கிரீன் சோன் பகுதி மட்டுமே உள்ளது.. அது கிருஷ்ணகிரி மட்டும்!

என்ன முறையை பின்பற்றுகிறார்கள்
இந்த மண்டலங்களின் லிஸ்டை இன்று காலை மத்திய அரசு வெளியிட்டது. இந்த மண்டலங்கள் எப்படி பிரிக்கப்படும் என்றும் அரசு விளக்கி உள்ளது . அதன்படி இதுவரை கேஸ்கள் இல்லாத, அல்லது கடந்த 21 நாட்களாக கேஸ்கள் இல்லாத பகுதிகள் கிரீன் சோன்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16க்கும் மேல் கொரோனா கேஸ்கள் இருந்தால் அது ரெட் சோன் பகுதிகள் ஆகும். இதற்கும் குறைவான கேஸ்கள் இருந்தால் அந்த பகுதி ஆரஞ்ச் சோன் என்று அழைக்கப்படும்.

கிரீன் எப்படி இருக்கும்
பச்சை மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இங்கே 50 சதவிகித பேருந்துகள் எப்போதும் போல இயங்கும். ஆனால் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்க முடியும்.
- பச்சை மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
- ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும்.
- சரக்கு வாகனம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு தேவையில்லை.
- வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இது மட்டுமின்றி பொதுவாக லாக் டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட மற்ற அத்தியாவசிய பணிகள் அனைத்தும் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் மண்டலம் எப்படி
ஆரஞ்ச் மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆரஞ்ச் மண்டலம் ஏறத்தாழ பச்சை மண்டலம் போலவே செயல்படும்.
- ஆரஞ்சு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை..
வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும்.
- உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி.
- இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
- கார்களை, பைக்குகளை அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம்.

சிவப்பு மண்டலம் எப்படி?
சிகப்பு மண்டலமாக இருக்கும் பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிகப்பபு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை..
- இங்கு வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி இல்லை.
- ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். ஆனால் 33% பேர் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும்.
- உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி.
- சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.
இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
- சிகப்பு மண்டலங்களில் ஊரகப் பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி.
- அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.
- மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதி ஆனால் ஊரக பகுதியில் மட்டும்.
- கார்களை, பைக்குகளை அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம்.
- இது மட்டுமின்றி பொதுவாக லாக் டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட மற்ற அத்தியாவசிய பணிகள் அனைத்தும் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலத்திற்கு உள்ளே கட்டுப்பாட்டு பகுதி
சிவப்பு மண்டலத்தில் அதிக கேஸ்கள் இருக்கும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படும்.
- அங்கு தீவிரமான காண்டாக்ட் டிரேசிங் சோதனைகள், வீடு வீடாக செய்யப்படும் சோதனைகள் அதிகமாக இருக்கும்.
- இந்த பகுதியில் இருக்கும் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியே வரவோ அல்லது அந்த பகுதிக்குள் செல்லவோ அனுமதி இல்லை.
- மருத்துவ தேவைக்கு மட்டுமே இவர்கள் வெளியே வர முடியும்.
- இந்த கண்டெயின்மெண்ட் பகுதிக்குள் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

அனைத்து பகுதியிலும் கட்டுப்பாடு
இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எப்போதும் போல விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மாநிங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இயங்காது.
- பள்ளி கல்லூரிகள் இயங்காது. தங்கும் ஹோட்டல்கள் செயல்படாது.
- உணவகங்களின் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
- அதேபோல் மால்கள், சினிமா தியேட்டர்கள் இயங்காது. வழிபாட்டு தளங்கள் செயல்படாது.
எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும். - மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு மேலும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது.
- எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
- அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications