"கொரோனா வேக்சின் வேஸ்டேஜ்".. மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தவறா? கொதிக்கும் மாநில அரசுகள்!
டெல்லி: மாநில அரசுகளின் கொரோனா வேக்சின் வேஸ்டேஜ் குறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தவறாக இருப்பதாக பல மாநில அரசுகள் கடுமையான புகார் வைத்துள்ளன.
பொதுவாக கொரோனா வேக்சின் என்று இல்லாமல் எந்த ஒரு வேக்சின் விநியோகத்திலும் "வேக்சின் வேஸ்டேஜ்" என்ற காரணி இருக்கும். வேக்சின் வேஸ்டேஜ் என்றால் ஒரு பகுதிக்கு எடுக்கப்படும் வேக்சினுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் வேக்சினுக்கும் இடையில் உள்ள வேறுபாடு காரணம் ஆகும்.
அதாவது 100 வேக்சினை சென்னைக்கு கொடுத்து, அதில் 95 வேக்சின் மட்டும் போடப்பட்டால் 5 வேக்சின் வேஸ்டேஜ் என்று அழைக்கப்படும். வேக்சின் வேஸ்டேஜ் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியாவில் 1.1% வரை வேக்சின் வேஸ்டேஜ் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வேக்சின்
கொரோனா வேக்சின் வேஸ்டேஜ் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது. அதிக வெப்பநிலை, வேக்சின் குப்பியை வெளியே எடுத்த பின் மக்கள் வராதது, பேக்கிங் உடைவது, சேதம் அடைவது, வெப்பநிலை காரணமாக வேக்சின் கெட்டுப்போவது, அதிக குளிரால் சமயங்களில் கெட்டு போவது, வெறும் கை படுவது என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன.

சட்டீஸ்கர்
சட்டீஸ்கர் அரசு 30% வேக்சினை வேஸ்ட் செய்துள்ளது. தமிழ்நாடு மூன்றாவது இடத்தில்உள்ளது. தமிழ்நாடு (15.5%), ஜம்மு காஷ்மீர் (10.8%), மத்திய பிரதேசம் (10.7%), தேசிய அளவில் மொத்தமாக (6.3%) வேக்சிங் வேஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் இந்த டேட்டா தவறு என்று மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் அரசு நாங்கள் வெறும் 4.65% வேக்சின் மட்டுமே வேஸ்ட் செய்துள்ளோம். மத்திய அரசு வெளியிட்டுள்ள டேட்டா தவறானது என்று கூறியுள்ளது. சட்டீஸ்கர் அரசும் இந்த டேட்டா தவறு என்று கூறியுள்ளது. 45+ மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வேக்சினில் 0.95% வேஸ்டும், 18+ வயது கொண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வேக்சினில் 0.29% வேஸ்ட் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

தமிழக அரசு
கேரளாவில் வேக்சின் வேஸ்ட் இல்லை. அவர்கள் வேக்சின் குப்பிகளில் மீதம் ஆகும் வேக்சினையும் பயன்படுத்துவதால், வேக்சின் வேஸ்ட் -4.16% ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முன் வேக்சின் வேஸ்ட் 6% ஆகி இருந்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்து வேக்சின் வேஸ்ட் 1% ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
Recommended Video

ஒப்புக்கொண்டார்
மாநில அரசுகளின் கொரோனா வேக்சின் வேஸ்டேஜ் குறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தவறாக இருப்பதாக பல மாநில அரசுகள் கடுமையான புகார் வைத்துள்ளன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை தவறை ஒப்புகொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் மத்திய அரசு புதிய வேஸ்டேஜ் விவரங்களை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications