கொரோனா மரணங்கள்.. மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 10% ஆக அதிகரிப்பு; ம.பி, குஜராத்தில் 6% ஆக குறைவு
டெல்லி: நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா மரணங்கள் தொடர்பான இறப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தம் இதுவரை 1,886 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இறப்பு விகிதம் என்பது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது எத்தனை சதவீதம் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமாக தேசிய அளவில் இறப்பு விகிதம் என்பது 3% உள்ளது. மேற்கு வங்கத்தில் இது 3 மடங்கு அதிகமாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1548. இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 151. மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 10% ஆக உள்ளது.
ஆனால் இதுவரை இறப்பு விகிதம் அதிகமாக இருந்த மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தற்போது 6%ஆக குறைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications