டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒளிந்திருக்கும்" கேஸ்கள்.. ஜூன், ஜூலையில் இந்தியாவில் கொரோனா உச்சம் அடையும்.. எய்ம்ஸ் எச்சரிக்கை!

இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 56351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக 1889 பேர் பலியாகி உள்ளனர்.

16776 பேர் மொத்தமாக நாடு முழுக்க குணமாகி உள்ளனர்.சரியாக 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது.

வெள்ளை மாளிகை பாதுகாவலருக்கு கொரோனா.. வேகமாக டிரம்பிற்கு நடந்த சோதனை.. வெள்ளை மாளிகை பாதுகாவலருக்கு கொரோனா.. வேகமாக டிரம்பிற்கு நடந்த சோதனை..

உச்சம் அடையும்

உச்சம் அடையும்

இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், இந்தியாவில் ஜூலை மாதத்தில் கேஸ்கள் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைய மாற்றங்கள் நடக்கும். தற்போது கேஸ்கள் உயரும் வீதம் கவலை அளிக்கிறது.

Recommended Video

    இந்தியா Lock Down நீக்கியதும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும்-எச்சரிக்கை
    கவலை அளிக்கிறது

    கவலை அளிக்கிறது

    இந்த புள்ளி விவரம் கவலை தருகிறது. இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போது மொத்தம் 4.8% நோயாளிகள் ஐசியூவில் இருக்கிறார்கள். இதில் 1.1% வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார்கள். அதேபோல் 3.3% பேருக்கு ஆக்ஜிசன் தேவைப்படுகிறது. நாம் தினமும் 95000 கொரோனா கேஸ்களை டெஸ்ட் செய்கிறோம். மொத்தம் 327 அரசு சோதனை மையங்கள் உள்ளது.

    டெஸ்ட்

    டெஸ்ட்

    188 தனியார் கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. 13,57,442 கொரோனா சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப்பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , கேரளா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை.

    தீவிரமான பணிகள்

    தீவிரமான பணிகள்

    காண்டாக்ட் டிரேசிங் முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் மிக முக்கியமாக கட்டுப்பாட்டு முறைகளில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும், எங்காவது கொரோனா கேஸ்கள் ஒளிந்திருக்கும். யாராவது தனக்கு தெரியாமலே கொரோனாவை சுமந்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா சோதனைகளை நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Coronavirus will see a peak in India by June and July says AIIMS director.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X