ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக பாஜக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல்.. பின்னணி என்ன?
டெல்லி: காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஊழல் ரேட் கார்டு விளம்பரம் தொடர்பாக ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக பாஜக சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக வரும் 18 ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தலை எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி என்பதை அம்மாநில வாக்காளர்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். கர்நாடக தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக கன்னட பத்திரிக்கைகளில்காங்கிரஸ் கட்சி, பஜகவின் ஊழல் விகித பட்டியல் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மே 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நாளிதழில் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதே விவகாரத்தில் பாஜக லீகல் நோட்டீஸும் அனுப்பியிருந்தது. விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூன்று தலைவர்களுக்கு பாஜக சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக பாஜக மாநில செயலாளர் கேஷவ் பிரசாத் கூறும் போது, " காங்கிரஸ் வெளியிட்ட அந்த விளம்பரம் தீய நோக்கம் கொண்டதாகவும் பாஜகவிற்கு அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது. அதன்காரணமாக நாங்கள் கங்கிரஸ் கட்சிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தோம்.
அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இன்று வரை காங்கிரஸ் அதை செய்யவில்லை. எனவே நாங்கள் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். ராகுல் காந்தியும் ட்விட்டரில் அதை பதிவிட்டு இருந்தார். எனவே அவரையும் ஒரு தரப்பாக சேர்த்து இருக்கிறோம்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications