அரசியல் கட்சிகளின் அலட்சிய போக்கு.. தேர்தல் மாநிலங்களில் 300% வரை.. அதிகரித்த கொரோனா பரவல்
டெல்லி: தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு 378% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் பிரசாரங்களின் போது, அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதே வைரஸ் பரவல் மாநிலத்தில் அதிகரிக்க முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

5 மாநில தேர்தல்
தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குக் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவித்தன. இதில் தமிழ்நாடு, புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அரசியல் கூட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், மாஸ்க்குகள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

யாரும் பின்பற்றவில்லை
இருப்பினும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த விதிகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. பிரசாரங்களின்போது, கிட்டதட்ட அனைத்து வேட்பாளர்களும் மாஸ்க்குகளைகூட அணியாமலேயே பிரசாரத்தை மேற்கொண்டனர். மேலும், அரசியல் கூட்டங்களில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் பங்கேற்ற நிகழ்வுகளும் சாதாரணமாகவே நிகழ்ந்தது.

வங்கத்தில் உச்சம்
நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரிக்க இது மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 378% அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்திலும் 331% கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் என்ன நிலை
இத்துடன் ஒப்பிடும்போது, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற இடங்களில் வைரஸ் சற்று குறைவாகவே அதிகரித்துள்ளது. தமிழக்தில் கொரோனா பாதிப்பு 173% அதிகரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் வைரஸ் பாதிப்பு 175% அதிகரித்துள்ளது. அதேபோல அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 15 நாட்களில் வைரஸ் பரவல் 84% அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் அலட்சியம்
நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கமாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே உள்ளது. மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் கட்சிகளே கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கு கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்ததாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications