’நண்பர்களுக்காக’ ரூ. 1,60,00,00,00,00,000 லட்சம் கோடி கடன் தள்ளுபடி- மோடியை நாடு மன்னிக்காது-ராகுல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தமது 'கார்ப்பரேட்' நண்பர்களுக்காக ரூ16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:

Country will never forgive Modi for Rs 16 lakh crore waived off for billionaire friends Rahul Gandhi

பிரதமர் நரேந்திர மோடி தமது கோடீஸ்வர நண்பர்களுக்காக ரூ. 1,60,00,00,00,00,000 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். அதாவது ரூ16 லட்சம் கோடி.

இந்த ரூ16 லட்சம் கோடி என்பது என்ன?

-நாட்டின் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் வழங்கக் கூடிய வேலைவாய்ப்பை தரக் கூடியது இந்த ரூ16 லட்சம் கோடி.

- நாட்டின் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் என ரூ16 லட்சம் கோடியை கொடுத்தால் அத்தனை கோடி குடும்பங்களின் நிலைமையையே மாற்றக் கூடியது.

- ரூ16 லட்சம் கோடியை கொண்டு 10 கோடி விவசாய குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

- ரூ16 லட்சம் கோடி மூலமாக ஒட்டுமொத்த தேசத்துக்கும் 20 ஆண்டுகளுக்கு ரூ400-க்கு கேஸ் சிலிண்டரை தர முடியும்.

- நாட்டின் ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் 3 ஆண்டுகளுக்கான செலவுதான் ரூ16 லட்சம் கோடி.

-- நாட்டின் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களுக்கு இலவச கல்வியைத் தரக் கூடியது இந்த ரூ16 லட்சம் கோடி.

Country will never forgive Modi for Rs 16 lakh crore waived off for billionaire friends Rahul Gandhi

இந்தியர்களின் வலியைப் போக்கக் கூடிய ரூ16 லட்சம் கோடியை அதானிகளுக்காக பிரதமர் மோடி செலவிடுகிறார். இந்த பெருங்குற்றத்துக்காக தேசம் ஒரு போதும் மோடியை மன்னிக்காது. நாட்டின் நிலைமை மாறிவிட்டது. ஒவ்வொரு இந்தியருக்குமான காங்கிரஸ் அரசாங்கம் அமையும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+