நாட்டின் சொத்துகளை அதானி-அம்பானியின் ‘எத்தனை டெம்போ’வுக்கு விற்பனை செய்தார் மோடி? ராகுல் கேள்வி
டெல்லி: நாட்டின் விமான நிலையங்களை பிரதமர் மோடி தமது 'டெம்போ' நண்பரிடம் ஒப்படைத்துவிட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி மற்றும் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அதானி, அம்பானி ஆகிய கார்ப்பரேட் நண்பர்களுக்காகவே மோடி செயல்படுகிறார் என்பது ராகுல் காந்தியின் தொடர் குற்றச்சாட்டு.

இதற்கு பதில் தந்த பிரதமர் மோடி, அதானி- அம்பானி மீதான ராகுல் காந்தி விமர்சனம் திடீரென நின்றுவிட்டது. அம்பானி - அதானியிடம் இருந்து டெம்போ நிறைய கறுப்புப் பணத்தை காங்கிரஸ் வாங்கிவிட்டது எனவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி இன்று வரை ஒவ்வொரு தலைவர்களும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருந்தேன். இங்கிருந்து மும்பை, கவுகாத்தியில் இருந்து அகமதாபாத் வரை அனைத்து விமான நிலையங்களையும் தனது 'டெம்போ நண்பரிடம்' ஒப்படைத்துள்ளார் பிரதமர். நாட்டின் சொத்துக்கள் எத்தனை டெம்போக்களுக்கு விற்கப்பட்டது என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா? இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும் மக்களின் சொத்துகளாக இருந்த லக்னோ, மும்பை, மங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், குவஹாத்தி விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்காக எத்தனை 'டெம்போ’ நிறைய பணம் வாங்கினாராம் மோடி? அதானியிடம் கறுப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விமான நிலையங்களை விற்க எத்தனை 'டெம்போக்கள்' யன்படுத்தப்பட்டன?பொதுமக்களிடம் சொல்லுங்கள்... பிரதமர் மோடி.. பதில் சொல்லுங்க.. அதானியும் அம்பானியும் காங்கிரஸுக்கு கறுப்பு பணத்தைக் கொடுத்ததாக குற்றம் சாட்டினீர்களே.. இது குறித்து எப்போது அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் விசாரிக்கப் போகிறது? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications