222 நாட்களுக்கு பின் நிம்மதி.. இந்தியாவில் பெரிய அளவில் குறைந்த கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்- முழு விபரம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஏற்பட்டதை விட இது குறைந்த அளவு கொரோனா பாதிப்பு ஆகும்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி பாதிப்புகளும், ஆக்டிவ் கேஸ்களும் குறைந்து வருகின்றன. இதுவரை 34,081,049 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 452,321 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 33,431,716 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 197,012 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கொரோனா
இந்தியாவில் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் 222 நாட்களில் இல்லாத அளவிற்கு மிக குறைவான எண்ணிக்கை அடைந்துள்ளது. இந்தியாவில் 197,012 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தினமும் புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் ஆகும் கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,577 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

கேரளா
கேரளாவில் தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7555 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இரண்டு நாட்களாக 8 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,54,321 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 87,657 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,865 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,39,270 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 74 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் கேஸ்கள் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,91,697 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 28,631 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,789 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,19,678 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 29 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை. வேகமாக வேக்சினேஷன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,87,092 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 2188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,899 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,36,379 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 14,814 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,83,459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 326 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,937 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,36,039 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 37,941 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications