கொரோனா தடுப்பூசி செலுத்திய 22 பேர் மரணம்... அதற்கு காரணம் வேறு - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பு 22 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், ஆனால் தடுப்பூசிக்கும் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
டெல்லி : இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 22 பேர் இதுவரை இறந்துள்ளனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அடுத்தகட்டமாக அரசு பிரநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு, அதன்படி கடந்த சில வாரங்களாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் மரணமடைந்துள்ளனர். இதுவரை எத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 22 பேர் இதுவரை இறந்துள்ளனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்தது. இதுவரை மரணமடைந்த 22 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 77 வயதான ஒருவர் தடுப்பூசி உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோயுடன் கூடிய இதய பாதிப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகளால் ஏற்படும் மரணம் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேசியக் குழு, கூறியது போல, இதுபோன்ற இறப்புகளை எதிர்வரும் நாட்களில் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி போடப்படும் இலக்கில் 50 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் இலக்கு விரைவில் எட்டப்பட்டு விடும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications